top 10 news today Tamil march 5 2024
கனிமொழி விருப்பமனு!
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்.பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 5) விருப்பமனு அளிக்க உள்ளார்.
ஒடிசாவில் மோடி
ஒடிசா மாநிலம் சண்டிகோலுக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி அங்கு 19,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
ராமேஸ்வரத்தில் சுற்றுலா பேருந்து அறிமுகம்!
ராமேஸ்வரத்தில் உள்ள சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 5 புதிய சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
பள்ளிக்கு விடுமுறை!
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து கோவை வடவள்ளியில் உள்ள PSBB தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை என பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்!
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
FICCI ஃப்ரேம்ஸ் ஆரம்பம்!
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள ’FICCI ஃப்ரேம்ஸ்’ 3 நாள் சர்வதேச திரைவிழா மாநாடு மும்பையில் இன்று தொடங்கி மார்ச் 7 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
மும்பை – டெல்லி அணிகள் மோதல்!
பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடரில் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. டெல்லியில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
செல்வராகவன் மற்றும் நாசர் பிறந்தநாள்!
உணர்வுகளின் காதலன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர் செல்வராகவன் மற்றும் தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த கதாப்பாத்திர நடிகரான நாசரின் பிறந்தநாள் இன்று.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 654வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனைக்கு வரும் Svartpilen 901!
Husqvarna Motorcycles நிறுவனத்தின் மிரட்டலான பைக்காக Svartpilen 901 இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் டிரெஸ் எது தெரியுமா?
கிச்சன் கீர்த்தனா : பஜ்ஜி மிளகாய் சட்னி
top 10 news today Tamil march 5 2024