பண்டிகைகள் மற்றும் முக்கிய விசேஷங்களுக்குச் செல்லும்போது, நீங்கள் நகங்களுக்கு வைக்கும் நெயில் பாலிஷ் பிறரை வசீகரிக்கும். எனவே, அதுபோன்ற நேரங்களில் சிவப்பு, பர்கண்டி போன்ற பளபளப்பான வண்ணங்களில் நகப்பூச்சு பயன்படுத்தலாம்.
கவுன் போன்ற உடைகள் அணியும்போது, பிரகாசமான சிவப்பு மற்றும் அடர்ந்த நிறங்கள் கொண்ட நெயில் பாலிஷை தேர்வு செய்வது நகங்களுக்கு மேலும் அழகு சேர்க்கும்.
இரவு நேர விருந்துகளில், உங்கள் நகங்களை பிரகாசிக்க செய்யும் வகையிலான வண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இதற்கு அடர் நிறங்களில் ஒன்றை அடித்தளமாக முதலில் தேர்வு செய்து, அதன்மீது மினுமினுக்கும் அல்லது இருளில் ஒளிரும் வகையிலான நிறங்களை பூசலாம்.
குளிரான இன்டோர் சூழ்நிலையில் ஊதா, சாம்பல், சில்வர் மற்றும் வெளிர் இளஞ்சிவப்பு நிறங்களைத் தேர்வு செய்யலாம். அவுட்டோரில் சிவப்பு, பச்சை மற்றும் மென்மையான நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இப்படியும் ஒரு தேர்தல் கூட்டணி: அப்டேட் குமாரு
மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின்
ஹெல்த் டிப்ஸ்: உங்கள் நகங்கள் உடையாமல் இருக்க… இதை செய்யுங்க!