கடலுக்கு அடியில் இருந்த ஏலியன் குழந்தை… அதிர்ச்சியில் உறைந்த மீனவர்!

Published On:

| By Kumaresan M

கடலுக்கு அடியில் இருந்து ஏலியன் வடிவிலான உயிரினம் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த ரோமன் ஃபெடர்ஸ்டோவ் வளைகுடா பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரின் வலையில் ஏலியன் போன்ற உருவத்துடன் கூடிய ஒரு உயிரினம் கிடைத்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரோமன் அந்த உயிரினத்தை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டார்.Fisherman Captures new Creature

ADVERTISEMENT

கட்டி போன்று காணப்பட்ட இந்த உயிரினம் mooth lumpsucker என்கிற ஒருவகையான  ்மீன் இனம். ஒரு அடிக்கு வரை வளரக் கூடியது என்றும் ரோமன் தன் பதிவில் கூறியிருந்தார். மேலும், கடலின் ஆழமான பகுதியில் வாழக் கூடியது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாவில் இந்த உயிரினத்தின் வீடியோவை பார்த்த பலரும் இப்படி ஒரு வகையான உயிரினத்தை பார்த்ததே இல்லை என்று கூறி வியப்படைந்தனர். ஏலியன்கள் இருப்பதை இந்த உயிரினம் காட்டுகிறது என்றும் ஒருவர் தெரிவித்துள்ளார். Fisherman Captures new Creature

ADVERTISEMENT

உடனடியாக, இதை கொன்று எரித்து விடவும்.இதே போன்று மற்றொன்றை பிடித்து விடவேண்டாம் என ரோமனுக்கு மற்றொருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது ஏலியனின் பெட் அனிமல் என்று இன்னொருவர் பதறியுள்ளார்.

வில் பெரில் வரைந்த ‘மெகாமைன்ட் ‘ என்ற கார்ட்டூனுடனும் ஹாரிபார்ட்டரின்’ தி டார்க் காட்’ டுடனும் இந்த உயிரினத்தை நெட்டிசன்கள் ஒப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Kumaresan M
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share