வெங்கோஜி… இவர் வேறு யாருமல்ல. தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னர்.மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சகோதரர். இருவருக்கும் தந்தை ஷாஜிராவ் போன்ஸ்லே. தாய்தான் வேறு வேறு. அதாவது ஷாஜிராவ் போன்ஸ்லேவின் இரண்டாவது மனைவி ஸ்ரீமன்ந்த் துகு அனு ராஜே சாகிப்பின் இரண்டாவது மகன்தான் இந்த வெங்கோஜி ராவ் போன்ஸ்லே.first maratha king in thanjavur
வெங்கோஜி தஞ்சையை நாயக்க மன்னர்களிடம் இருந்து கைப்பற்றி கி.பி 1676 முதல் 1684 வரை ஆட்சி செய்தார். தஞ்சையை ஆட்சி செய்த போன்ஸ்லே வம்ச முதல் அரசர் இவர். தஞ்சையில் இவரின் ஆட்சி காலத்தில்தான் மூத்த சகோதரரான சத்ரபதி சிவாஜி ராஜாவின் மகன் சாம்பாஜி தஞ்சைக்கு வந்தார். அண்ணன் மகனை மகிழ்விக்க வெங்கோஜி புது புது பதார்த்தங்களை செய்ய அரண்மணை சமையல் கலைஞர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்போது, தஞ்சை அரண்மணையில் சாம்பாஜிக்காக ஒரு சிறப்பு பதார்த்தம் தயாரிக்கப்பட்டது. புதுவித சமையல் ஒன்றை அரசவை சமையல் கலைஞர்கள் முயன்றனர். அந்த புது வித சமையலை சாப்பிட்டு பார்த்து விட்டு சாம்பாஜி ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து தள்ளி விட்டார். உடனே அந்த புதுவித பதார்த்தத்துக்கு சாம்பாஜி பெயரே வைக்க மன்னர் வெங்கோஜி முடிவு செய்தார். அந்த பதார்த்தம்தாம் சாம்பார். இன்று சாம்பார் வைக்காத தமிழக வீடுகளை பார்ப்பது அரிது.

வெங்கோஜி மன்னர் திருச்சி சமயபுரம் மாரியம்மனின் சிறந்த பக்தர். ஒரு முறை அம்மனை தரிசிக்க வந்த போது, அவரது கனவில் அம்மன் தோன்றி, தஞ்சை அருகே இருக்கும் புன்னைமரங்கள் சூழ்ந்த புன்னைநல்லூரில் நான் இருக்கிறேன் என்று கூறியதாக ஐதீகம் உண்டு.
உடனே, மன்னர் புன்னைநல்லூர் சென்று தன் கனவில் தோன்றிய அந்த இடத்தை கண்டு பிடித்தார். புன்னை மரங்கள் சூழ்ந்த இடத்தில் அம்மன் சிலை இருப்பதையும் கண்டார். அந்த இடத்திலேயே அம்மனுக்கு ஒரு ஆலயத்தை எழுப்பினார். அந்த கோவில்தான் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். first maratha king in thanjavur
வெங்கோஜி ராஜாவுக்கு மொத்தம் 10 மகன்கள். அவர்களில் ஷாஜிராவ் போன்ஸ்லே, சரபோஜி ராவ் போன்ஸ்லே மற்றும் துகோஜி ராவ் போன்ஸ்லே ஆகிய மூன்று பேர் தஞ்சையை அரசாண்டவர்கள். இன்று வரை தஞ்சையில் மராட்டிய மன்னர்களின் குடும்பம் வசிக்கிறது.

அடுத்ததாக, விஜயநகர பேரரசுவின் பிரதிநிதிகளாக பலிஜா இன மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் வந்து ஆண்டனர். ஒரு கட்டத்தில் விஜயநகர பேரரசு பலம் இழந்ததும், தாங்கள் ஆண்ட பகுதிகளில் சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டனர். அப்படித்தான், மாமதுரை நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. அதன் அடையாளமாக உருவானதுதான் மதுரை நாயக்கர் மஹால்!
சட்டமன்றத்தில் நேற்று பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சமுத்திரகுப்தர் முதல் சத்ரபதி சிவாஜி வரை தமிழகத்தை யாரும் ஆண்டதில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.