அதிர்ச்சியில் கோலிவுட்: அடையாறு ஆற்றில் குதித்து விபரீத முடிவு எடுத்த தயாரிப்பாளர் கே.ராஜன்! நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Rajan

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் (85) இன்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.

ADVERTISEMENT

காரில் சென்று கொண்டிருந்த கே.ராஜன் திடீரென காரை நிறுத்த சொல்லி இறங்கியதாகவும், பின்னர் ஆற்றில் குதித்ததாகவும் சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக குடும்பத்திரை விட்டு பிரிந்து கே.ராஜன் தனியார் ஹோட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

கே.ராஜனின் இந்த திடீர் மறைவு தமிழ் திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share