3 எழுத்து இட்லி நடிகை.. உனக்கு அருகதை இருக்கா? – வெளுத்து வாங்கிய நடிகர் ரவி மோகன்

Published On:

| By Mathi

Ravi Mohan Press Meet

3 எழுத்து இட்லி நடிகைதான் (Idli Actress) தன் வாழ்க்கையில் விளையாடி வருவதாக நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) கடுமையாக சாடியுள்ளார்.

சென்னையில் இன்று 16-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரவி மோகன், “ சில விஷயங்கள் சொல்லணுங்க. அதை ஓப்பனா சொன்னாதான் அது ஆகும். இந்த மூணு லெட்டர் நடிகை இருக்காங்கல்ல, நான் ஆல்ரெடி நிறைய கேஸ்… அவங்க பேரை சொன்னா… அவங்களும் என் பேரை தெரியாமல் என்னை வந்து அட்டாக் பண்றாங்களாம். இட்லி நடிகை… அதையும் சொல்லிடுறேன் நானு.

ADVERTISEMENT

3 பெரிய ஹீரோஸ் குடும்பத்தை கெடுத்தவங்க

மூணு பேர் ஹீரோஸ் என்கிட்ட பெரிய ஹீரோஸ், அவங்க ஜெனரேஷன் ஹீரோஸ் வந்து என் குடும்பத்தை கெடுக்க வந்த இவ அவ… (அசிங்கமான வார்த்தையில் சொன்னார்கள்)… நாசமா போயிருக்கும். மூணு பேரோட வாழ்க்கையை கெடுக்கறதுக்கு ரெடியா இருந்த அந்த ஒரு பொம்பள, என் லைஃப் பத்தி பேசுறாங்க.

ஆனா வேற ஏதாவது பிரச்சனை வந்தா அப்படியே, ‘ஏய்! நான் ஃபெமினிஸ்ட், நான் இப்படி ஆயிடுவேன்’. என்ன டிராமா இதெல்லாம்? உனக்கெல்லாம் ஏதாவது துப்பு இருக்கா என்னை பத்தி பேசுறதுக்கு?

ADVERTISEMENT

எப்படி இப்படி எல்லாம்… எப்படி இப்படி எல்லாம் மனுஷங்க இருக்காங்கன்னே புரியல எனக்கு.

நான் யாரு, நீ யாரு? பெர்சனல் லெவல்ல டச் பண்ணாத. என்னோட நல்லா நடிப்பியா? நடிச்சுக்கோ… ஐயோ, கால்ல நானே விழுறேன். அவார்டு வாங்குறியா? வாங்கிக்கோ.

ADVERTISEMENT

பெர்சனல் லைஃப்ல, ‘மனுஷன் இவன், தப்பான மனுஷன்’னு ஏதாவது பேசின நீ இன்னொரு தடவை… உனக்கு என்ன அருகதை இருக்கு பேசுறதுக்கு? நீ என்ன பெத்தியா எல்லாரையும் வந்து பேசுற?” என சாடினார்.

பில்லி சூனியம்- ரத்த வாந்தி

மேலும், ”மனைவி ஆர்த்தியுடனான விவகாரத்து வழக்கு முடியும் வரை தாம் நடிக்கப் போவது இல்லை; எனக்கு பில்லி சூனியம் வைத்துவிட்டனர்; இதனால் ரத்த வாந்தி எடுக்க நேரிட்டது” எனவும் ரவி மோகன் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share