என் வாழ்க்கைய கெடுத்தவ – ரவி மோகன்… புத்தியே இப்படிதான் – குஷ்பு!

Published On:

| By Kavi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிவதாக கடந்த ஆண்டு கூறியிருந்தார்.  ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இந்தநிலையில் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வந்து சென்றனர்.

ADVERTISEMENT

 ரவி மோகன் – ஆர்த்தி பிரச்சனைக்கு கெனிஷா தான் காரணம் என்று செய்திகள் பரவின. ரவி மோகனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸில்’ கெனிஷா முக்கியப் பங்கு வகிக்கிறார்.

இந்தசூழலில் கெனிஷா நேற்று திடீரென ஒரு வீடியோ வெளியிட்டார். 

ADVERTISEMENT

அதில், நான் ஒரு போதும் இன்னொரு குடும்பத்தை கெடுக்க நினைக்கமாட்டோன். நான் சென்னையை விட்டே வெளியேறுகிறேன் என்று கூறியிருந்தார். 

இதைத்தொடர்ந்து  ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில்,  “தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை நீங்கள் ஒருபோதும் எழுப்பக் கூடாது. அவள் ஒரு தாய் சிங்கமாக இருக்கும்பட்சத்தில் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். என்னுடைய கண்ணியமான மௌனத்தை பலவீனம் என்றோ, அல்லது அதைத் தவறாகப் பயன்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்ளலாம் என்றோ ஒருபோதும் தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது. தேவைப்பட்டால், என் குழந்தைகளையும் என்னுடைய கண்ணியத்தையும் பாதுகாப்பதற்காக, நான் என் வசதியான எல்லையைத் தாண்டி வெளியே வந்து இந்த உலகத்தை உண்மையோடு எதிர்கொள்வேன். ஏனெனில், உண்மை எப்போதும் வெல்லும்.” என்று பதிவிட்டிருந்தார். 

ADVERTISEMENT

இந்த பதிவுக்கு நடிகை குஷ்பு கமெண்ட் செய்திருந்தார். அதில்,  “ஒரு தாயிடம் எப்போதும் வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது. நீ உன் பிள்ளைகளுடன் இருக்கும் ஒரு சிங்கப்பெண். உனக்கு இன்னும் அதிக சக்தி கிடைக்கட்டும் என் செல்லமே” எனறு குறிப்பிட்டிருந்தார். 

இந்தசூழலில் தான் இட்லி நடிகை  என குஷ்புவை மறைமுகமாக குறிப்பிட்டு நடிகர் ரவி மோகன் விமர்சித்துள்ளார். 

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இன்று (மே 16) அவர் அளித்திருக்கும் பேட்டியில்,  “எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை என் படம் இனி ஸ்கீரினிங் ஆகாது.  ஏனென்றால் என்னால் நடிக்க முடியவில்லை. தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்க முடியவில்லை. 

என்னை சீண்டி பார்க்கிற எல்லோருக்கும், சொல்கிறேன் நான் இங்கேதான் இருப்பேன்… வாங்க. இனி நான் சாதுகிடையாது.  என்ன நடக்கிறதோ பார்த்துகொள்ளலாம். 

என்னைக்கு எனக்கு விவாகரத்து கிடைத்து, என் பிரச்சினைகள் எல்லாம் சரியாகுதோ, எப்போது இந்த சைபர் புல்லிங் எல்லாம் நிற்கிறதோ. அதன் பிறகு பார்த்துக்கொள்கிறேன். 

23 வருடம் இரவும் பகலுமாக வேலை செய்திருக்கிறேன். என்னுடைய 95 சதவிகித படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. இதையெல்லாம் நானே சொல்கிறேன் என்கிற போது கேவலமாக இருக்கிறது.  இருந்தாலும் கேவலப்படுத்துகிறவர்கள் முன்பு இதை சொல்வதில் தப்பே இல்லை. 

இரண்டாவது படத்துக்கே விருது வாங்கியவன் நான். கலைமாமணி விருது வாங்கியிருக்கிறேன். என்னுடைய சொந்த உழைப்பில் வாங்கியிருக்கிறேன். 

எங்க அப்பாவும், அண்ணனும் 4 வருஷம் வேலையே செய்யவில்லை.  என் குடும்பத்தை காப்பாத்த தினமும் காலையில் எழுந்து சூட்டிங் சென்றுவிடுவேன். 

என் குடும்பம்தான் எல்லாமே. அவர்களை எதாவது சீண்ட வேண்டும் என்று நினைத்தால் நான் சும்மா இருக்கமாட்டேன்.  நான் அமைதியாக இருப்பதால், எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என நினைக்கிறார்களா. 

இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தது என் தவறு.  என்னங்க ஆம்பள, பொம்பள… என்னங்க பெமினிஷம். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக படம் எடுத்தவன் நான்.  பேராண்மை படத்தில் நான் சொன்னதை இன்று வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மிகப்பெரிய சக்தி, அதை தேவையில்லாமல் வீணடிக்கக்கூடாது என சொல்லியிருக்கிறேன். 

14 வருடம் என்னுடைய எக்ஸ் லைப்ல இருந்தேன். அப்போது அவர்தான் கடவுள், நான் தான் திட்டுவேன் என  சொல்லியிருக்கிறார். எல்லா இண்டர்வியூவும் இருக்கிறது. 

இந்த இரண்டு வருஷம் அமைதியாக இருந்தது ஏன் தெரியுமா… உண்மை ஜெயிக்கணும் என்பதற்காகத்தான்.  

14 வருஷம் பேசலையே பொறுத்துக்கிட்டேனே. என் பிள்ளைங்களை பார்க்க  விடமாட்டிங்கிறாங்க. என்னோட லைப்ஸ் ஹாப்பியஸ்ட் டேன்னு நான் ட்வீட் பண்ணேன், அவனும் நானும் சேர்ந்து டிக் டிக் டிக் படம் நடிக்கும்போது… என் பிள்ளைங்க நான் எப்படி விடுவேன்?

என் பிள்ளைங்க ஸ்கூல் பீஸ் 50 லட்சம் ரூபாய். நான் தான் கட்டிகிட்டு வர்றேன். அவங்களுக்கு நல்ல லைப் கிடைக்கணும்  என் பாசத்தை பத்தி பேசாதீங்க உங்க யாருக்கும் எதுவுமே தெரியாது. 

என் சின்ன பையன் கூட தினமும் நைட் செஸ் விளையாடுவேன். அவனுக்காக தோத்து போவேன். இப்போது போன் பேச விடுவதில்லை. ஸ்கூலுக்கு பாடிகார்டு அனுப்புறாங்க. இந்த வீடியோவை என் பசங்க பார்க்கணும். 

அந்த லைப் பிடிக்கலனு தெரிஞ்சுதானே ஓடி வந்தேன். 

எவ்வளவு கோடியில வீடு… போய் வெளியில கேளுங்க… ஈசியாரே சொல்லும். இருக்கும் போது பாத்துக்க முடியலனா, இல்லாதப்ப மூடிட்டு இருக்கணும். 

நான் பாட்டுக்கு தான இருந்தேன் அப்படியே போயிருக்கலாமே? எதுக்கு சுரண்டி சுரண்டி சுரண்டி இரத்தம் வர அளவுக்கு உயிர் போற அளவுக்கு சுரண்டுனா என்னங்க பண்றது மனுஷன்?

கெனிஷாவை காலி பண்ணி அனுப்பிச்சிட்டீங்க. நீங்க எல்லாரும் சைபர் புல்லிங் பன்றீங்க. உங்களெல்லாம் நான் சும்மாவே விட போறது இல்லை. என் அண்ணனுக்கு நடந்ததுனாலும் தம்பிக்கு நடந்ததுனாலும் நான் இதான் பண்ணுவேன்.

இப்ப நான் வாடகை வீட்டுல இருக்கறேன். அவங்க எல்லாம் நல்லா இருக்காங்க, கோடிக்கணக்கில் நான் கட்டுன வீட்டுல நல்லாதான் இருக்காங்க. எனக்கு தெரியாதா வெளிய போன்னு சொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும் எனக்கு? என்னங்க இதெல்லாம் ஒரு மனுஷனை நிம்மதியா வேலை செய்ய விடாம… எப்படிங்க?

ரத்தம் வாந்தி வந்துட்டு இருக்கு பிளாக் மேஜிக் பண்ணிட்டு இருக்காங்க, நான் இருந்தப்பவும் பண்ணிட்டு இருந்தாங்க. பொட்டி பாம்பு மாதிரி வச்சிருந்தாங்க. 

4 வருஷமா எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லை.  ஆனால் இப்பதான் என்ன செய்யுறேனு தெரியுதா? 

சம்பாதித்த பணத்தை கூட என்னால் சுதந்திரமாக செலவு செய்ய முடியவில்லை. மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை கெடுத்தார். 3 எழுத்து இட்லி நடிகை அவங்களும் என்ன அட்டாக் பண்றங்களாம். அவங்க ஜெனெரேஷன் ஹீரோஸ் 3 பேரு என் குடும்பத்தையே கெடுக்க வந்தவனு அவங்கள சொன்னாங்க. 3 பேரு வாழ்க்கைய கெடுக்க பாத்துட்டு Feminist Feminist னு சொல்லிட்டு, என் வாழ்க்கையை கெடுக்குறாங்க. ஒரே நாளில் என்னால் விவாகரத்து செய்திருக்க முடியும். என் குழந்தைகளுக்காக அமைதி காத்தேன்” என ஆவேசமாகவும் கண்ணீர் மல்கவும் பேசினார். 

இந்தநிலையில் நடிகை குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில், “சிலர் தங்கள் புத்தியை(டி.என்.ஏ-வை) நிரூபிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். நான் சொன்னது சரிதான் என்று நிரூபித்ததற்கு நன்றி” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share