முகத்தில் வயது முதிர்ச்சியின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும்போது, பலரும் முதலில் கவனம் செலுத்துவது சருமத்தில்தான். ஆனால் உண்மையில் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில்தான் வயதான தோற்றம் வேகமாக வெளிப்படத் தொடங்குகிறது.
கண் அருகில் சருமம் மிகவும் மெல்லியதாக இருப்பதால், வறட்சி மற்றும் சுருக்கங்கள் எளிதில் ஏற்படுகின்றன.
கண்களைச் சுற்றி ஏன் சுருக்கம் வருகிறது?
சிரிப்பது, கண் சிமிட்டுவது என தினசரி முக அசைவுகளால் கண்களைச் சுற்றியுள்ள சருமம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது.
காலப்போக்கில் கொலாஜன் குறைவதும், சூரியனின் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்பும் இந்தப் பகுதியில் சுருக்கங்களை அதிகரிக்கலாம்.
மேக்கப் கலைக்கும்போது கவனம் தேவை
காஜல், ஐலைனர் உள்ளிட்ட மேக்கப்பை அகற்றும்போது கண்களைச் சுற்றி அழுத்தமாகத் தேய்ப்பது பலரும் செய்யும் தவறு. அதற்குப் பதிலாக மைசெலார் வாட்டரைப் பயன்படுத்தி சில விநாடிகள் மெதுவாக ஒற்றி சுத்தம் செய்வது சருமத்துக்கு நல்லது.
ரெட்டினோல் மட்டும் போதுமா?
கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களை சமாளிக்க ரெட்டினோல் பயன்படுத்தப்படுவது குறித்து அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இந்தப் பகுதி மிகவும் மென்மையானது என்பதால், அதிக வீரியம் கொண்ட பொருட்களை நேரடியாகப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். பெப்டைட்கள், ஹைலூரோனிக் ஆசிட் அல்லது செராமைடுகள் கொண்ட சருமப் பராமரிப்புப் பொருட்களும் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும்.
சன்ஸ்க்ரீனை மறக்காதீங்க!
முகத்துக்கு சன்ஸ்க்ரீன் போடும்போது கண்களைச் சுற்றியுள்ள பகுதியை பலரும் தவறவிடுகின்றனர். வெளியில் செல்லும்போது சன்ஸ்க்ரீனுடன் சன் கிளாஸ் அணிவதும் இந்த மென்மையான பகுதியை சூரியக் கதிர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும். தினசரி சிறிய பழக்கங்களிலேயே கண்களின் இளமையான தோற்றத்தை நீண்ட காலம் பராமரிக்க முடியும்.
