லண்டனில் விஜய்யை சந்தித்த Ashok Leyland, Finolex தலைமை நிர்வாகிகள்!

Published On:

| By Mathi

Executives of Ashok Leyland and Finolex Meet Vijay in London

இங்கிலாந்து லண்டனில் முதல்வர் விஜய்யை Ashok Leyland, Finolex நிறுவனங்களின் நிர்வாகிகள் இன்று (செப்டம்பர் 14) சந்தித்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு: இங்கிலாந்து, இலண்டனில் இன்று (14.09.2026)அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

ADVERTISEMENT

இச்சந்திப்பில், ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற ‘வெற்றி’ (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட ரூ. 2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து ஹிந்துஜா, தமிழ்நாடு முதலமைச்சரிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை விளக்கியதோடு, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாகக் காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் ஆர்வம் தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிகழ்வின்போது இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிதி மணி திரிபாதி, London மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share