காலையில் எழுந்தவுடன் வாட்ஸ்அப் செக் செய்வது முதல், இரவு உணவு ஆர்டர் செய்வது வரை நம் விரல்கள் ஸ்மார்ட்போன் திரையில் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த “டச் ஸ்கிரீன்” (Touch Screen) மற்றும் “ஆப்” (App) கலாச்சாரம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், ‘ஸ்மார்ட்போன்’ என்ற கருவிக்கு மாற்றாக ‘எட்ஜ் நோட்’ (Edge Node) என்ற புதிய தொழில்நுட்பம் உருவாகி வருகிறது.
ஸ்மார்ட்போன் ஏன் “டம்மி”? (Smartphone vs Edge Node) இப்போது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் உண்மையில் அவ்வளவு புத்திசாலி இல்லை. நீங்கள் சிரியிடம் (Siri) ஒரு கேள்வி கேட்டால், அந்த ஆடியோ இங்கிருந்து அமெரிக்காவில் உள்ள ஒரு சர்வர் ஃபார்முக்கு (Cloud) சென்று, அங்கு ப்ராசஸ் செய்யப்பட்டு, பின்னர் பதிலளிக்கிறது. இது ஒரு “டம்மி டெர்மினல்” (Dumb Terminal) போன்றதுதான். ஆனால், வரவிருக்கும் ‘எட்ஜ் நோட்’ அப்படியல்ல. இது ஒரு அதிவேக கணினி (Powerful Processor) கொண்டது. தகவல்களை எங்கேயோ உள்ள சர்வர்களுக்கு அனுப்பாமல், உங்கள் கையடக்கக் கருவிக்குள்ளேயே (Locally) ப்ராசஸ் செய்யும். இதனால் வேகம் (Zero Latency) அதிகரிக்கும்; முக்கியமாக உங்கள் தரவுகள் உங்கள் கையை விட்டு வெளியேறாது என்பதால் தனியுரிமை (Privacy) பாதுகாக்கப்படும்.
கருவி அல்ல… சேவகன்! (Agentic AI) ஸ்மார்ட்போனுக்கும் எட்ஜ் நோடிற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் ‘செயல்பாடு’தான்.
- தற்போது (Tool): இப்போது நீங்கள் ஒரு டாக்ஸி புக் செய்ய வேண்டும் என்றால், மொபைலை எடுத்து, ஊபர் (Uber) செயலியைத் திறந்து, இடத்தை டைப் செய்து புக் செய்ய வேண்டும். இங்கே மொபைல் ஒரு ‘கருவி’ (Tool) மட்டுமே.
- எதிர்காலம் (Agent): ஆனால், எட்ஜ் நோட் ஒரு ‘ஏஜென்ட்’ (Agent) போலச் செயல்படும். அதற்குத் தெரியும் உங்கள் காலண்டரில் இன்று 9 மணிக்கு மீட்டிங் இருக்கிறது என்று. நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போதே, தானாகவே டாக்ஸியை புக் செய்து வாசலில் நிறுத்திவிடும். நீங்கள் எந்த ஆப்பையும் திறக்கத் தேவையில்லை.
மனித இடைமுகம் இல்லாத எதிர்காலம் (No Human Interface): நாம் கட்டளையிட்டால் மட்டும் வேலை செய்யும் எந்திரங்களுக்குப் பதிலாக, நம் தேவையை அறிந்து முன்கூட்டியே செயல்படும் ‘ஏஜென்டிக் ஏஐ’ (Agentic AI) தான் அடுத்த தொழில்நுட்பப் புரட்சி. இனி ஸ்க்ரோல் செய்யவும், டைப் செய்யவும் தேவை இருக்காது; தொழில்நுட்பம் நம்மைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சேவகனாக வலம் வரும்.
