உதடுகள் அடிக்கடி வறண்டு வெடிக்கிறதா? இதோ எளிய பராமரிப்பு வழிகள்!

Published On:

| By Kavi

உதடுகள் வறண்டு போவது சாதாரணமான பிரச்சினைதான். குறிப்பாக அதிக வெப்பம், குளிர் அல்லது உடலில் நீர்ச்சத்து குறையும் நேரங்களில் உதடுகளில் வெடிப்பு, வறட்சி ஏற்படலாம். உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், மற்ற சருமப் பகுதிகளைப் போல அவை இயற்கையாக ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது.

லிப் பாம் பயன்படுத்தலாம்

ADVERTISEMENT

உதடுகள் வறண்டு போகும்போது நல்ல தரமான லிப் பாம் பயன்படுத்துவது உதவும். லிப் பாம் உதடுகளில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுவதுடன், வெளிப்புறச் சூழலால் ஏற்படும் வறட்சியிலிருந்தும் பாதுகாக்கிறது.

வெளியே செல்லும்போது சூரிய பாதுகாப்பு கொண்ட லிப் பாம் பயன்படுத்துவது கூடுதல் பலன் தரும். வாசலினையும் உதடுகளின் வறட்சிக்கு பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

உதட்டை நாக்கால் ஈரப்படுத்தாதீங்க!

உதடுகள் வறண்டதாக உணரும்போது பலரும் நாக்கால் உதட்டை ஈரப்படுத்துவார்கள். ஆனால் இது பிரச்சினையை மேலும் அதிகரிக்கலாம். அதேபோல், வெடித்த உதட்டின் உலர்ந்த தோலைப் பிடுங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

ADVERTISEMENT

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் முக்கியம். தினசரி உணவில் கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெற உதவும்.

இரவு நேர பராமரிப்பு

இரவில் உதடுகளுக்கு மென்மையான மாய்ஸ்சரைசர் அல்லது வாசலின் போன்ற ஈரப்பதத்தைப் பாதுகாக்கும் பொருளைத் தடவி வரலாம். தொடர்ந்து பராமரிப்பது உதடுகள் உலர்ந்து போவதைத் தடுக்க உதவும்.

உதடுகளில் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களையும் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். தரமற்ற அல்லது எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது வெடிப்பு மற்றும் எரிச்சலை அதிகரிக்கலாம்.

எப்போது கவனம் தேவை?

உதடுகளில் ஏற்படும் வறட்சி தொடர்ந்து நீடித்தாலோ, அதிகமாக வெடித்து ரத்தம் வருதல், வீக்கம், வலி அல்லது ஆறாத புண் போன்றவை இருந்தாலோ மருத்துவரை அணுகுவது நல்லது. சாதாரண வறட்சி என்று அலட்சியம் செய்யாமல், நீடிக்கும் பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிவது முக்கியம்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share