திமுக முப்பெரும் விழா: புதிய தேதி அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால், செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அவ்விழா வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

திமுகவில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாகச் சேர்த்து ஆண்டுதோறும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடி வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவில் விருது பெறுவோர் பட்டியலும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த விழா ஒத்திவைக்கப்படுவதாகத் தலைமை அறிவித்தது.

தற்போது, வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இவ்விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2026 முப்பெரும் விழா விருது பெறுவோர் விவரம்:

பெரியார் விருது: விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பா

ADVERTISEMENT

அண்ணா விருது – சேலம் மத்திய மாவட்ட அவைத்தலைவர் ஜி.கே. சுபாஷ்

கலைஞர் விருது: துணைப் பொதுச் செயலாளரும் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவருமான திருச்சி சிவா

பாவேந்தர் விருது: மருத்துவ அணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு

பேராசிரியர் விருது: தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். முகமது தம்பி

மு.க.ஸ்டாலின் விருது: இளைஞரணி அமைப்பாளர் நா. இளையராஜா

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share