மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக மற்றும் தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக மாறியுள்ளது. இந்நிலையில் யார், யார்… எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
