தேமுதிக இடம் பெறப் போகும் கூட்டணி குறித்து முடிவு எடுத்துவிட்டோம்.. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: நீங்க யாரும் பயப்படாதீங்க. எல்லாருக்கும் பதவிகள், வாய்ப்புகள் சமமாக பகிர்ந்து தரப்படும். இங்க எந்த ஓரவஞ்சனையோ, இவரு எனக்கு வேணும், அவரு வேணாம், இங்க ஈகோ எதுக்கும் இடம் கிடையாது. எல்லாரும் இந்த கட்சிக்காக உழைச்சிருக்கீங்க, எல்லாரும் இந்த கட்சிக்காக பயணிச்சிருக்கீங்க. ரசிகர் மன்ற காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் இந்த கட்சிக்காக கேப்டனுக்காக உண்மையா உழைத்துக் கொண்டிருக்கிற உங்களுக்கு அந்த பதவிகள் தேடி வரும்.
வெகு விரைவிலே இன்னும் இருக்கின்ற 20% பூத் கமிட்டிகளையும் 100% ஆக முடிச்சு தலைமை அலுவலகத்திலே அந்த ஃபைலை நீங்க கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்.அந்த பணியை நீங்கள் செய்யும் பொழுதுதான் நீங்கள்தான் நாளைய கவுன்சிலர்கள் என்பதை நீங்க இப்பவே டிசைட் பண்ணி வச்சுக்கோங்க. சரிங்களா? அதனால நீங்க யாரும் கவலைப்பட வேணாம். ‘என்னடா அண்ணி இன்னும் கூட்டணிய பத்தியே சொல்லவே மாட்டேங்குறாங்களே’ அப்படின்னு நினைச்சுகிட்டே இருக்கீங்க இல்லையா? எல்லாருடைய எதிர்பார்ப்பும் அதுதானே?
நம்ம நிர்வாகிகள் ஒரு அமைதியா தான் இருக்கீங்க, இந்த முன்னாடி வரிசையில் நிக்கிறாங்க பாருங்க கேமரா வச்சு, அவங்க தான் ரொம்ப பயங்கர டென்ஷன் ஆகுறாங்க, எமோஷன் ஆகுறாங்க. நம்ம மாவட்ட செயலாளர், நிர்வாகி, தொண்டர்கள் கூலா இருக்கீங்க. ‘அண்ணி கரெக்ட் டைம் கரெக்ட் டிசிஷன் எடுப்பாங்க’ அப்படின்னு நீங்க கான்ஃபிடெண்டா இருக்கீங்க. ஆனா நம்ம பத்திரிக்கை சகோதரர்கள் தான் ஒரே டென்ஷன் அவங்களுக்கு பாவம்.
எங்க நான் போனாலும் வந்துருவாங்க. நேத்து ஈஷா யோகா போனேன் அங்க, சென்னை ஏர்போர்ட், நம்ம ஆபீஸ்… அவங்க வேலை அது, அத நான் தப்பா சொல்லல, பட் அவங்க வந்து ரொம்ப எப்போ எப்போ அறிவிக்கிறீங்க? தேர்தல் தேதி அறிவிக்கப் போறாங்களே அப்படின்னு. அப்பதான் நான் சொன்னேன் இது எங்க கட்சிப்பா, நாங்களே கூலா இருக்கோம், பீ கூல் நோ டென்ஷன் அப்படின்னு நான் சொன்னேன்.
அதனால தேசிய முற்போக்கு திராவிட கழகம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து, எங்கள் மாவட்ட செயலாளர் நான் எப்பவும் சொல்றது தான் இப்பவும் சொல்றேன். எங்கள் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக கிளைக் கழக என் கண் முன்னாடி இருக்கின்ற எங்களுடைய பகுதி வட்ட மகளிர் அணி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்கணும் நீங்க எல்லாம் விரும்பினீர்களோ அந்த கூட்டணி நிச்சயம் இந்த தேர்தலில் அமையும்.
அந்த அறிவிப்பு வரும் பொழுது உண்மையிலேயே நீங்க எல்லாரும் மிகப்பெரிய சந்தோசத்துல மிகப்பெரிய ஒரு கொண்டாட்டத்தில் நீங்க இருப்பீங்க. சரியான ஒரு முடிவை அண்ணி எடுத்திருக்காங்க, கரெக்ட் டைம் அத அறிவிச்சிருக்காங்க என்று நீங்க எல்லாருமே மிகப்பெரிய சந்தோஷமான ஒரு செய்தி வரக்கூடியதாகத்தான் அந்த அறிவிப்பு இருக்கும் என்பதை மட்டும் இப்போ உங்க முன்னாடி சொல்றேன். ஓகேவா? ரெடியா? ஓகே அந்த பொறுப்பை என்கிட்ட கொடுத்துடுங்க நான் பார்த்துக்கிறேன். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
