தொகுதி மறுசீரமைப்பு: திமுக எம்.பி.க்கள், மா.செ.க்களுடன் ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

Published On:

| By Mathi

DMK Meeting

மத்திய பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக திமுகவின் எம்.பி. க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நாடாளுமன்றத்தின் நாளைய சிறப்பு கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய மக்களவை எம்பி இடங்களை உயர்த்த வகை செய்கிறது இந்த மசோதா.

ADVERTISEMENT

இந்த மசோதா நிறைவேற்றப்படும் நிலையில் வட இந்திய மாநிலங்களுக்கான எம்.பிக்கள் எண்ணிக்கை, தென்னிந்திய மாநிலங்களவை விட பல மடங்கு அதிகரிக்கும். இதனால் திமுக உள்ளிட்ட தென் மாநிலங்கள் இதனை கடுமையாக எதிர்க்கின்றன.

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். இந்த நிலையில் இன்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் ஸ்டாலின் கூட்டி உள்ளார். மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share