சிவகங்கை சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

Published On:

| By Kavi

சிவகங்கையில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 5 தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகன் உள்ளனர்.

ADVERTISEMENT

காடுகளில் விறகு வெட்டும் தொழிலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திண்பண்டங்கள் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து வந்து ஆபாச வீடியோக்களை காட்டி ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகார் தொடர்பாக திருப்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்திரனை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT

இது தொடர்பான வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி கோகுல் முருகன் வழக்கை விசாரித்து வந்தார்.

இந்த நிலையில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சந்திரன் குற்றவாளி என இன்று (ஏப்ரல் 24) அறிவித்த நீதிபதி தண்டனை விவரத்தையும் வெளியிட்டார்.

சந்திரனுக்கு 5 மரண தண்டனை விதித்த நீதிபதி, மேலும் 4 ஆயுள் தண்டனை , 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.

5 சிறுமிகளுக்கும் தலா 7 லட்சம் ரூபாய் வீதம் ரூ 35 லட்சம் அபராதத்தை வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share