“இந்த வருஷம் நீ ஓடு… அடுத்த வருஷம் நான்!” – தம்பதியர் வெற்றிக்கான ‘கரியர் சீசன்’ (Career Seasons) ஃபார்முலா

Published On:

| By Santhosh Raj Saravanan

couples career seasons strategy ambition balance relationship advice tamil

இன்றைய நவீன வாழ்க்கையில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்களாகவும், அதிக லட்சியம் (Ambition) கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், பிரச்சனை எங்கே வருகிறது என்றால், “இரண்டு பேரும் ஒரே நேரத்தில், டாப் கியரில் ஓட நினைக்கும்போதுதான்.”

வீடு, குழந்தைகள், வேலை, பதவி உயர்வு என அனைத்தையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முயலும்போது, இறுதியில் மிஞ்சுவது மனஅழுத்தமும் (Burnout), சண்டையும் தான். இதற்குத் தீர்வாக நிபுணர்கள் முன்வைக்கும் புதுமையான உத்திதான் கரியர் சீசன்ஸ்’ (Career Seasons).

ADVERTISEMENT

அது என்ன ‘கரியர் சீசன்’? இயற்கையில் எப்படி வெயில் காலம், மழைக்காலம் மாறுகிறதோ, அதேபோலத் தம்பதியினரும் தங்கள் லட்சியங்களுக்கான காலத்தை மாற்றிக்கொள்வதுதான் இந்த முறை.

  • சுருக்கமாகச் சொன்னால், “இந்த ஆண்டு உன் கனவுக்காக நான் கொஞ்சம் பின்வாங்குகிறேன்; அடுத்த ஆண்டு என் கனவுக்காக நீ எனக்குத் தோள் கொடுக்க வேண்டும்.”

எப்படிச் செயல்படுத்துவது? இதை ஒரு ரிலே ரேஸ்’ (Relay Race) போலப் பாருங்கள்.

ADVERTISEMENT
  1. சீசன் 1 (மனைவிக்கான ஆண்டு): உதாரணத்திற்கு, மனைவிக்கு இந்தப் பதவி உயர்வு மிக முக்கியம் என்றால், அந்த ஆண்டு முழுவதுமே முன்னுரிமை (Priority) அவருடைய வேலைக்குத்தான். கணவன் வீட்டு வேலைகளைப் பார்ப்பது, குழந்தைகளைப் பள்ளியில் விடுவது என ‘சப்போர்ட்டிங் ரோல்’ (Supporting Role) எடுக்க வேண்டும்.
  2. சீசன் 2 (கணவனுக்கான ஆண்டு): அடுத்த ஆண்டு கணவன் புதிதாகத் தொழில் தொடங்க நினைக்கலாம். அப்போது மனைவி, வீட்டின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். கணவன் முழு மூச்சாகத் தொழிலில் இறங்கலாம்.

ஏன் இது சிறந்தது?

  • ஈகோ இருக்காது: “யார் பெரியவர்?” என்ற போட்டி வராது. “இது நம்ம இருவரின் வெற்றி” என்ற உணர்வு வரும்.
  • குற்றவுணர்ச்சி குறையும்: “வேலையையும் பார்க்க முடியவில்லை, வீட்டையும் பார்க்க முடியவில்லை,” என்ற குற்றவுணர்ச்சி (Guilt) இருக்காது. ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும்.

கவனிக்க வேண்டியவை: இந்தத் திட்டத்திற்கு மிக முக்கியம் வெளிப்படையான பேச்சுவார்த்தை.

ADVERTISEMENT
  • “எவ்வளவு காலம் இந்த சீசன் நீடிக்கும்?” (6 மாதம் அல்லது 1 வருடம்) என்பதை முன்பே பேசித் தீர்மானியுங்கள்.
  • “சப்போர்ட்டிங் ரோல்” எடுப்பவர் அடிமை கிடையாது; அவர் அந்த அணியின் முதுகெலும்பு என்பதை மறந்துவிடாதீர்கள்.

வாழ்க்கை என்பது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல; அது ஒரு மாரத்தான். கைகோர்த்து ஓடினால், தூரம் குறைவு… வெற்றி நிச்சயம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share