தவெகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுப்பதா? தமிழகம் முழுவதும் காங். நாளை போராட்டம்

Published On:

| By Mathi

Congress Protest

தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்கவிடாமல் தடுப்பதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நாளை மே 8-ந் தேதி போராட்டம் நடத்தும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநரைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share