video: கோவையில் 500 மீட்டர் ஆள் இல்லாமல் தனியாக ஓடிய பைக்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை உக்கடம் மேம்பாலத்தில் இளைஞர் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நிலையில் சுமார் 500 மீட்டர் தூரம் இருசக்கர வாகனம் மட்டும் ஆளில்லாமல் சென்று விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையில் உக்கடம் மேம்பாலத்தில் ஆத்துப்பாலம் நோக்கி இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக வாகனத்திலிருந்து அந்த இளைஞர் தவறி விழுந்தார். இதில் நீண்ட தூரத்திற்கு இருசக்கர வாகனம் மற்றும் ஆளில்லாமல் தனியாக சென்று பிறகு பக்கவாட்டு சுவரில் மோதி கீழே விழுந்தது. விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி இருசக்கர வாகனம் மட்டும் தனியே நீண்ட தூரம் சென்ற வீடியோ அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகன இளைஞரின் தலைக்கவசத்தில் பொருந்தி இருந்த கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share