கடந்த 1990களில் இந்தியாவில் ரஸ்னா என்ற குளிர்பானம் ரொம்பவே பாப்புலரானது. ரஸ்னா இல்லாத விழாவே இருக்காது. எப்போது, ரஸ்னா கொடுப்பார்கள் என்று சிறுவர்கள் காத்து கிடப்பார்கள் . கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ரஸ்னா குளிர்பான சந்தையில் கோலோச்சியது.
கோடை காலத்தில் ஆங்காங்கே சிறுவர்கள் கிரிக்கெட் தொடர் நடத்துவார்கள். அப்போது, 10 ஓவர் இடைவெளியின் போது, ரஸ்னா குளிர்பானம்தான் கொடுக்கப்படும். ரஸ்னா பவுடர் வடிவில் இருக்கும். குளிர்ந்த நீரில் கலந்து ஐஸ்கட்டி போட்டு சர்க்கரையை கலந்தால் சுவையான ரஸ்னா ரெடியாகி விடும். 1 ரூபாய் பாக்கெட்டிலும் ரஸ்னா கிடைக்கும். 5 ரூபாய் பாக்கெட்டில் 32 கிளாஸ் ரஸ்னா தயாரிக்க முடியும் என்று அந்த நிறுவனம் அப்போது சொல்வது உண்டு.
அதே போல, ரஸ்னா விளம்பரத்தில் நடித்த குட்டி பொண்ணும் அந்த விளம்பரமும் கூடவே ரொம்பவே பாப்புலர். ஐ லவ் யூ ரஸ்னா என்ற வாசகத்தோடு முடிவடையும் அந்த விளம்பரம். அங்கிதா ஜவேரி என்ற பெயர் கொண்ட குட்டி பொண்ணும் பிற்காலத்தில் பிரபல நடிகையாகவும் உருவெடுத்தார். இவர், 2005-ம் ஆண்டு சுந்தர்.சி நடிப்பில் பிரசாந்த் நடித்த ‘லண்டன்’ படத்தில் நடித்தார்.
இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிக்கு சந்தையை ரஸ்னா வைத்திருந்தது. எனினும், கால ஓட்டத்தில் வெளிநாட்டு பானங்கள் வருகையால் 2000ம் ஆண்டுக்கு பிறகு ரஸ்னா விற்பனை வெகுவாக குறைந்தது. இந்த நிலையில், இந்த கோடை காலத்தை முன்னிட்டு மீண்டும் ரஸ்னாவை சந்தைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. rasna comeback indian market again
இதன் நிர்வாக இயக்குநர் பிருஷ் கம்பெட்டா கூறுகையில்,’ மீண்டும் ரஸ்னாவை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த முறை 25 முதல் 30 சதவிகிதம் வரை வளர்ச்சி கிடைக்கும் என்று நம்புகிறோம். சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யவுள்ளோம் . சீனாவின் வரி பிரச்சைனைகளை நாங்கள் எளிதாக கையாண்டு வருகிறோம். எங்கள் தயாரிப்பு விலை குறைந்தது . ஆனால், மதிப்பு குறைந்தது அல்ல. இப்போது 60 நாடுகளில் ரஸ்னா விற்பனையாகிறது. உள்நாட்டு மாம்பழங்களான அல்போன்ஸா, நாக்பூர் ஆரஞ்சு போன்றவை எங்களின் முக்கிய மூலப் பொருள்கள். முற்றிலும் உள்நாட்டு மூலப்பொருட்களை பயன்படுத்திதான் தயாரிக்கிறோம் ‘ என்கிறார். rasna comeback indian market again
பிகார் தலைநகர் பாட்னாவில்தான் ரஸ்னா நிறுவனத்தின் பிளான்ட் உள்ளது.இங்கிருந்து ஆண்டுக்கு 20 லட்சம் கேஸ்களை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.