மம்முட்டிக்கு பெருங்குடல் புற்றுநோய்: நண்பரின் பேஸ்புக் பதிவு சொல்வது என்ன?

Published On:

| By Kumaresan M

நடிகர் மம்முட்டிக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால், படபிடிப்பை நிறுத்தி விட்டு சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்லவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த தகவலை அவரின் பி.ஆர்.ஏஜன்சி தரப்பில் மறுக்கப்பட்டிருந்தது. mammootty diagnosed with Colon cancer

இந்த நிலையில், மம்முட்டியின் நெருங்கிய நண்பரான இயக்குநர் ஜோஸ் தாமஸ், இரு வாரத்தில் கதிர்வீச்சு சிகிச்சை கொடுத்தால் இந்த நோய் குணமாகி விடும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, மம்முட்டியின் மற்றொரு நெருங்கிய நண்பரான நடிகர் தம்பி ஆண்டனி ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘ மம்முட்டி மலையாளிக்கு எல்லாம் மம்முக்கா. பெருங்குடல் புற்று நோய். கோலன்கோபி மூலம் கண்டறியலாம். 50 வயதை தாண்டிய ஒவ்வொருவரும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சோதனையை செய்து கொள்ள வேண்டும்.

ஒரு அறுவை சிகிச்சையோ அல்லது கதிர்வீச்சு மூலமே இதை எளிதாக குணப்படுத்தலாம். எந்த வழியில் சிகிச்சை கொடுக்க வேண்டுமென்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட பலரும் அதற்கு பிறகும் 20 ஆண்டுகள் ஹெல்த்தியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது மம்முக்காவும் சிகிச்சை பெற்று மீண்டும் நல்ல உடல் நலத்துடன் திரைப்படங்களில் நடிக்க வருவார். இதில், எந்த ஐயமும் இல்லை. mammootty diagnosed விரைவாக அவர் குணமடைய வாழ்த்துகிறேன். ‘

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share