சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6) ஒரு சவரன் தங்கம் ரூ. 2,160 வரை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தேவை, போர் பதற்றங்கள் என பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.1,07,840க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் ஒரு சவரன் தங்கம் ரூ. 2,160 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 270 உயர்ந்து ரூ.13,750 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் 18 கேரட் தங்கம் விலை ரூ.270 உயர்ந்து ரூ.11,565க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.2,160 உயர்ந்து ரூ.92,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ. 5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.250 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 10,000 வரை உயர்ந்து ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 5-8-2026 | 1,06,800 |
| 4-8-2026 | 1,05,600 |
| 3-8-2026 | 1,06,000 |
| 2-8-2026 | 1,05,760 |
| 1-8-2026 | 1,05,760 |
| 31-7-2026 | 1,06,040 |
| 30-7-2026 | 1,05,840 |
| 29-7-2026 | 1,05,240 |
| 28-7-2026 | 1,05,720 |
| 27-7-2026 | 1,06,960 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 5-8-2026 | 240 |
| 4-8-2026 | 235 |
| 3-8-2026 | 235 |
| 2-8-2026 | 235 |
| 1-8-2026 | 235 |
| 31-7-2026 | 235 |
| 30-7-2026 | 235 |
| 29-7-2026 | 235 |
| 28-7-2026 | 235 |
| 27-7-2026 | 240 |
