தினமும் காலை வெந்தயத் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Published On:

| By Santhosh Raj Saravanan

Benefits of drinking fenugreek water

தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தயத் தண்ணீர் (Fenugreek Water) குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் காரணமாக நமது உடலில் கொழுப்பு பிரச்சனை அதிகரிக்கிறது. கொழுப்பு படிவதால் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கொழுப்பைக் (LDL cholesterol) கட்டுப்படுத்த மாத்திரைகள், மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் கூட உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்பதும் மிகவும் அவசியமாகும். இதனுடன் குறிப்பாக வெந்தயமும் கொழுப்பைக் குறைப்பதோடு உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் அளிக்கிறது.

ADVERTISEMENT

வெந்தயத்தில் உள்ள நன்மைகள்:

வெந்தயத்தில் நார்ச்சத்து, ஸ்டீராய்டல் சபோனின்கள் நிறைந்துள்ளன.  வெந்தயத் தண்ணீரை (Benefits of fenugreek) தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது அது நமது கெட்ட கொழுப்பை எரிப்பதற்கு உதவி புரிகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தமனி சுவர்களில் படிந்துள்ள கொழுப்பை மெதுவாக கரைத்து அடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. சீரான ரத்த ஒட்டத்தையும் மேம்படுத்துகிறது.

வெந்தய தண்ணீரை (Fenugreek Water) எப்படி குடிப்பது?:

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீர் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்ததும் வெந்தய விதைகளை மென்று சாப்பிட்டு தண்ணீரை குடிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது:

சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயத் தண்ணீர் மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துகள் சர்க்கரை (Diabetic patient) உறிஞ்சும் தன்மையை மெதுவாக்குகின்றன. இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவிபுரிகிறது. காலையில் வெந்தயம் சாப்பிடுவது உணவுக்கு முந்தைய சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

செரிமானப் பிரச்சனைகளுக்கு அருமருந்து:

வாயு, அமிலப் பிரச்சனை போன்ற செரிமானப் பிரச்சனைகளால் அவதிப்பட்டால் வெந்தய தண்ணீரைக் குடிக்கலாம். வெந்தய நீர் உங்கள் செரிமானத் தன்மையை (Improves Digestion) அதிகப்படுத்தும். உடலில் இருந்து நச்சுக்களை நீக்கி குடல்களை சுத்தம் செய்கிறது.

ADVERTISEMENT
எடை இழப்புக்கு உதவி புரிகிறது:

வெந்தயத் தண்ணீர் குடிப்பது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கும். இதனால் அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். இயற்கையாக எடையை இழக்க (Fenugreek for weight loss) விரும்புபவர்கள் வெந்தயத் தண்ணீர் சிறந்த பானமாக உள்ளது.  இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் எலும்பு, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share