கோடைகால நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமால் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவுகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்த வெயில் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன. மேலும் கோடை வெயில் காரணமாக வைரஸ் தொற்றுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. பொதுவாக கடும் வெயில் நேரத்தில் குழந்தைகள் முதியவர்கள், கர்பிணி பெண்கள் பகல் நேரங்களில் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் எனற அறிவுறுத்ததப்படுள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- “வெப்பவாதம் காரணமாக ஒருவர் மயக்கம் அடைந்தாலோ அல்லது உடல் சோர்வாக இருந்தாலோ, அவரை நிழல் மற்றும் காற்றோட்டம் உள்ள இடத்தில் ஒருபக்கமாக படுக்கவைக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர், இளநீர் அல்லது மோர் குடிக்கச் செய்து உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும்.
மேலும், ஈரமான துணியால் உடலைத் துடைத்து குளிர்விக்க வேண்டும். காய்ச்சல் என தவறாக நினைத்து ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால் மாத்திரைகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மருந்துகள் கொடுத்தால், தற்காலிகமாக காய்ச்சல் குறைந்தாலும், கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும். சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தும் விளையக்கூடும்.
எனவே கோடைக்காலத்தில் எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
