ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 127 ரன்களில் இந்திய அணி ‘வீரர்கள்’ சுருட்டினர்.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரரான, சாஹிப்சாதா பர்ஹான் மட்டும் நிலையாக நின்று ரன்களைக் குவித்தார். ஆனால் எஞ்சிய பாகிஸ்தான் அணியினரால், இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
முஹம்மது ஹாரிஸ் 3 ரன்களிலும் பக்கார் ஜமான் 17 ரன்கள், கேப்டன் சல்மான் ஆஹா 3 ரன்களிலும் நவாஸ் 5 ரன்களிலும் அவுட் ஆகி நடையைக் கட்டினர்.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தானின் பர்ஹான் மட்டுமே அதிகபட்சமாக 40 ரன்களை எடுத்திருந்தார்.
இந்திய அணி வீரர்களில், அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
