உலகக் கோப்பை தகுதி சுற்றில் பிரேசில் அணியை 4 -1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வீழ்த்தியது.
2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான தென்அமெரிக்க கண்ட அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினாவுடன் பிரேசில் மோதியது. argentina beat brazil
இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி, மார்ட்டினஸ் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடவில்லை. எனினும், அர்ஜெண்டினா ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்திலேயே கோல் அடித்து கணக்கை தொடங்கியது.
12 வது நிமிடத்தில் எஸ்னோ பெர்னான்டஸ் பிரேசிலின் பாக்சுக்குள் இருந்து அர்ஜெண்டினாவுக்கான இரண்டாவது கோலை அடித்தார். 26வது நிமிடத்தில் பிரேசில் அணி பதில் கோல் திருப்பியது. இந்த கோலை மாத்யஸ் கன்கா அடித்தார்.
37வது நிமிடத்தில் பெர்னான்டஸ் கிராஸ் செய்த பந்தை அலிஸ்டர் கோலாக மாற்ற அர்ஜெண்டினா 3 கோல்கள் அடித்திருந்தது. தொடர்ந்து, பிற்பாதியில் 71வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்கரரான சிமியோன் அர்ஜெண்டினாவுக்கான 4வது கோலை அடித்தார்.
இதற்கு பிறகு, இந்த ஆட்டத்தில் மேற்கொண்டு கோல்கள் விழவில்லை. இறுதியில் அர்ஜெண்டினா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்தது.
நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா 14லீக் போட்டிகள் ஆடி 31 புள்ளிகள் பெற்று முதல் தென்அமெரிக்க அணியாக 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துக்குள் நுழைந்துள்ளது. பிரேசில் 14 ஆட்டங்களில் 21 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
அதே வேளையில், ஷில்லாங்கில் நேற்றிரவு நடந்த ஆசியக் கோப்பை தகுதி சுற்று சி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. இந்த ஆட்டத்தில் கோல் எதுவும் விழாமல் டிராவில் முடிந்தது. argentina beat brazil
பிரீமியர் லீக் அணியான ஷெஃபீல்டு யுனெடெட்டுக்காக விளையாடி வரும் ஹம்சா சவுத்ரி வங்க தேச அணிக்காக கோல் அடிக்க கடும் போராட்டம் நடத்தினாலும் பலன் கிடைக்கவில்லை. ஆட்டம் சமனில் முடிந்தததால், புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதே பிரிவில் சிங்கப்பூர் – ஹாங்காங் அணிகள் மோதிய ஆட்டமும் கோல் விழாமல் சமனில் முடிந்ததால், 4 அணிகளுக்குமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.