இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட டீக்கடையில பேசிக்கிட்டு இருந்தேன். Update kumaru memes jokes
“மாப்ள… ஏதாவது புதுசா தொழில் தொடங்கனும். ஐடியா இருந்தா சொல்லுன்னு” கேட்டான்.
“மகாகும்பமேளாவுல 1,100 ரூபா கொடுத்தா நம்ம போட்டோவை புனித நீராட்டி வீடியோ எடுத்து அனுப்புறாங்களாம். இதை மாதிரி நீயும் ஒவ்வொரு கோவில் பக்கம் போய் போட்டா எடுத்து புனித நீராட்டி வீடியோ எடுத்து அனுப்புனா அதுவே நல்ல பிசினஸ்னு” சொன்னேன்.
“தாங்ஸ் மாப்ள… நாளைக்கே இந்த வேலையை தொடங்கிறேன்னு” சொல்லிட்டு கிளம்பிட்டான்
இவனுங்களையெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது!
நீங்க அப்டேட்ஸ் பாருங்க….
ச ப் பா ணி
“இது சாப்பாடு” என்பது வியப்பு
“இதெல்லாமா சாப்பாடு” என்பது ஏளனம்

செங்காந்தள்
தனிமரம் தோப்பாகாது.
ஆனால் ஒரு பூச்சி இருந்தாலும் அது ‘மூட்டைப்’ பூச்சி …!!!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எல்லாரும் ரன்அவட், விக்கெட்டுன்னு பேசிட்டு இருக்காங்க.. நாட்ல எதோ முக்கியமான கிரிக்கெட் மேட்ச் நடக்குது போல..

▶படிக்காதவன்™✍
எப்போதும் ஜோடி ஃபோட்டோ அல்லது நெருக்கமா இருக்க மாதிரி ஃபோட்டோ போடுறவங்களுக்கு ஏதாவது வரி போடுவீங்களானு மாமிகிட்ட கேட்கனும்…
ச ப் பா ணி
இந்த சைஸ் ஸ்டாக் இல்லை என்பது..
ரெடிமேடு கடையில் சொல்லும்,
ரெடிமேடு பதில்கள்

Sasikumar J
நமக்கு நல்லது பண்ண சொன்னா, நம்ம கூட இருந்தே நமக்கு நல்லா பண்றாங்க…!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏன் திமிங்கலம்.. யார்கிட்டயாவது ‘உனக்கென்னப்பா நல்ல வசதியா இருக்க..’ன்னு சொன்னா, அதை ஒரு complement ah எடுத்துக்காம ஏதோ சாபம் விட்ட மாதிரி பதட்டமாகறாங்களே.. அது ஏன்..?

செங்காந்தள்
முகூர்த்த நாளுக்கு முந்தைய நாட்களில் அதிகமாக விற்பனை ஆகும் பொருட்களில் ஹேர் டையும் ஒன்று…!!!
Joe…😎😎
சங்கீஸ் ~ ஹிந்தி வேண்டாம்னு சொல்றீங்கள்ல.. அப்போ ரூபாய் நோட்டுல உள்ள ஹிந்தியவும் அழிக்க வேண்டியதானே..
~ அவ்ளோ தைரியம் இருந்தா ஏன்டா ரூபாய் நோட்டுல 22 மொழி பிரிண்ட் பண்றீங்க.. அங்கேயும் ஹிந்தி மட்டுமே போட வேண்டியதானே. Update kumaru memes jokes