ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின்கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் இன்று (ஏப்ரல் 7) முதல் வரவேற்கப்படுகின்றன. anganwadi workers job
நேரடி நியமனங்கள் மூலம் 7,783 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் இறுதியில் அறிவித்திருந்தது.
அங்கன்வாடி பணியாளர் (3886), குறு அங்கன்வாடி பணியாளர் (305)மற்றும் அங்கன்வாடி உதவியாளர் (3592) ஆகிய பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 20 – 40 வயது வரை இருக்க வேண்டும். விதவைகள், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு வயது வரம்பு 20 முதல் 45 வயது வரை தளர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 20 முதல் 43 வயது வரையில் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்கள் மாதம்தோறும் ரூ.7,700 தொகுப்பூதியத்திலும், குறு அங்கன்வாடிகளில் ரூ.5,700 தொகுப்பூதியத்திலும், அங்கன்வாடி உதவியாளர்கள் ரூ.4,100 தொகுப்பூதியத்திலும் நியமிக்கப்படுவார்கள்.
தூத்துக்குடி, சேலம், சென்னை என பல்வேறு மாவட்டங்களில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சியில் 17 அங்கன்வாடி பணியாளர்கள், 17 குறு அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் 262 அங்கன்வாடி உதவியாளர்கள், புதுக்கோட்டை 281 அங்கன்வாடி பணியாளர்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 196 அங்கன்வாடி உதவியாளர்கள். அரியலூரில் 18 அங்கன்வாடி பணியாளர்கள், 4 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 24 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களுக்கு https://www.icds.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட லிங்க்கில் விண்ணப்பத்தை இந்த மாதம் 23ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். anganwadi workers job