விஜய்யை சந்திக்காத அமித்ஷா- தமிழகத்தையே அவமதிப்பதா? சிபிஐ எம்.பி. சுப்பராயன்

Published On:

| By Mathi

CM VIjay Amit Shah

டெல்லி சென்ற முதல்வர் விஜய்யை (CM Vijay) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) சந்திக்காதது தமிழ்நாட்டை அவமதிப்பதாகும் என சிபிஐ கட்சியின் (CPI) எம்.பி. சுப்பராயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுப்பராயன் எம்.பி. கூறுகையில், “நியூடெல்லி சென்ற தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு,சந்திக்க நேரம் ஒதுக்காமல் புறக்கணித்த, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் போக்கு, அவர் வகிக்கும் பொறுப்பிற்கும் பொருத்தமானதல்ல என்பதோடு, கடும் கண்டனத்திற்கும் உரியதாகும்!
இது,தமிழ்நாட்டையே அவமதித்த ஆணவப்போக்காகும்!

ADVERTISEMENT

அமித்ஷாவின் இந்தப்போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் மேலும் தண்டிப்பார்கள்! வேரும்,வேரடி மண்ணோடும் பெயர்த்தெறியவேண்டிய தீயசக்தி ஆர்எஸ்எஸ்-பாஜக என்பதை தமிழ்நாடு என்றும் மறந்துவிடக்கூடாது!” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

நான் 1993-ம் ஆண்டு முதல் இதழியல் துறையில் பணிபுரிகிறேன். அச்சு, இணையம், காட்சி, ஒலி என அனைத்து ஊடகத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழின் பழம் பெரும் நாளேடான தினமணியில் செய்தியாளராக பணியை தொடங்கினேன். உலகின் முதல் தமிழ் செய்தி இணையதளமான தற்போது பயன்பாட்டில் இல்லாத ‘இன்தாம்’ இணையத்தில் செய்திப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளராக, சன் நியூஸ் செய்தி சேனலில் சிறப்பு தொகுப்பு ஆசிரியராக, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இணை ஆசியராக பணிபுரிந்தேன். தற்போது மின்னம்பலத்தில் பணியாற்றுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share