ADVERTISEMENT

தமிழகத்துக்கு வரும் முன்.. மோடி போட்ட ‘ட்வீட்’!

Published On:

| By Mathi

Modi Tamil Nadu

தமிழகத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, ”தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசுகிறார். இதனையொட்டி தமது எக்ஸ் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!

ADVERTISEMENT

மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share