ஆதிதிராவிட மாணவர்களின் நிதியை ஊழல் செய்வதா? – நீதிபதிகள் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

House Husband-Madurai High Court

ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட மாத உதவித் தொகையான 100, 200 ரூபாய்களை பல ஆண்டுகளாக மோசடி செய்த அதிகாரிகள் , பிச்சை எடுத்து பிழைக்கலாம். ஊழல் செய்த அதிகாரிகளுக்கு, அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, அவர்களைக் காப்பாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது என நீதிபதிகள் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

அந்த மனுவில், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 2 கோடி 35 லட்சம் நிதியில் பெரும் மோசடி நடந்துள்ளது. 2017 முதல் 2023 வரை அரசு ஒதுக்கிய தொகை, மாணவர்களின் கணக்கில் செலுத்தப்படாமல், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் பதவி உயர்வும் பெற்றுள்ளனர். ஒரு சிலர், பணி ஓய்வு பெறவும் மாவட்ட ஆட்சியர் அனுமதித்துள்ளார்.

ஆதி திராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. அரசு நிதியை மோசடி செய்தவர்களுக்கு சாதகமாக காவல் துறை செயல்படுகிறது. எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சக்திவேல், ராமகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் சித்தார்த் ஆஜராகி, “இந்த விவகாரத்தில் 8 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு, 8 வட்டாட்சியர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “அரசு நிதியிதில், பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் 8 வட்டாட்சியர்களின் பங்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்கு ஒரு பக்கம் இருந்தாலும், துறைரீதியாக அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? முறைகேட்டில் ஈடுபட்ட வட்டாட்சியர்களுக்கு எவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டது? அவர்களுக்கு குற்ற குறிப்பானை வழங்கப்பட்டுள்ளதா? விசாரணை அதிகாரிகள் ஏன் நியமிக்கப்படவில்லை?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

அப்போது, அரசு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்காக வந்திருந்த அலுவலர்களிடம் தகவல் கேட்டனர். இதனால் கோபம் அடைந்த நீதிபதிகள், “பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. ஆனால், வழக்கு விசாரணைக்கு அலுவலக உதவியாளர்களை அனுப்பி வைத்துள்ளனர். முதலில் இவர்களை வெளியேறச் சொல்லுங்கள். இது போன்ற வழக்குகளில் உதவியாளர்களை அனுப்பினால் சிறைக்கு செல்ல நேரிடும்” என்று எச்சரித்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது “ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட மாத உதவித் தொகையான 100, 200 ரூபாய்களை பல ஆண்டுகளாக மோசடி செய்த அதிகாரிகள் , பிச்சை எடுத்து பிழைக்கலாம். ஊழல் செய்த அதிகாரிகளுக்கு, அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, அவர்களைக் காப்பாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share