தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை எடுக்க தயங்காதவர்களில் இயக்குனர் பார்த்திபன் முக்கியமானவர். கடைசியாக இவர் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைக்கதையில் எடுக்கப்பட்டதால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்த படத்திற்கு விருதுகளும் கிடைத்தது.
இந்நிலையில் “சந்தோஷம் சௌத் இந்தியன் ஃபிலிம்” விருதுகளில் இரவின் நிழல் படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது கிடைத்துள்ளதாக பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
Award என்றாலே கலைஞர்களுக்கு சந்தோஷமே!இது santhosham film awards-மகிழ்ச்சியில் நன்றி.சிறப்பு நிகழ்ச்சி மூலம் வாழ்த்திய sun TV,news18,என் பார்வைக்கு வராத சேனல்களுக்கும்,பாசத்தோடு வாழ்த்திய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் +திரையுலக நண்பர்கள்+ நண்பர்கள் அனைவருக்கும் உளப்பூர்வ நன்றி pic.twitter.com/M0gxUQdjkK
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 14, 2023
அந்த பதிவில், “Award என்றாலே கலைஞர்களுக்கு சந்தோஷமே!இது santhosham film awards-மகிழ்ச்சியில் நன்றி. சிறப்பு நிகழ்ச்சி மூலம் வாழ்த்திய sun TV, news 18, என் பார்வைக்கு வராத சேனல்களுக்கும், பாசத்தோடு வாழ்த்திய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் + திரையுலக நண்பர்கள்+ நண்பர்கள் அனைவருக்கும் உளப்பூர்வ நன்றி” என்று பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
விருது வென்றதற்காக பலரும் பார்த்திபன் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது பார்த்திபன் “52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு” என்ற படத்தை இயக்கி உள்ளார். கூடிய விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
சென்னை: இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும் இரண்டு உள்நாட்டு முனையங்கள்!
