தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜயின் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.
இந்த சூழலில் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான இந்த பதவியை ஒரு பட நிறுவனத்தின் தயாரிப்பாளருக்கு எப்படி கொடுக்க முடியும், முதல்வர் விஜய்க்கு தெரிந்தவர் என்பதால் கொடுக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழக அரசு பதவியா என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான ஆ.ராசா தனது எக்ஸ் பக்கம் மூலம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தன்னுடன் ஆடிய ‘அரிதாரங்கள்’ சிலருக்கு சட்டமன்றம்-அமைச்சரவை !
முதலீட்டுப் ‘புள்ளிக்கு’ தில்லியில் பதவி! கொள்கை தலைவர்களுக்கு ‘சாதி’ சிறை !
அரசாணை இல்லாமலே அரசுக்குள் ‘அதிகாரத் தோழர்கள்’
இருட்டில் ‘இளிக்கும்’ வெளிப்படை நிர்வாகம்!
நன்றாகவே மணக்கிறது “மாற்றம்” . நாசியை மூடப்போகிறோமா?
நாற்றத்தை போக்கிடப்போறோமா?
வாழ்க ஜனநாயக ‘ன்’ (ம்) !!” என காட்டமாக பதிவிட்டுள்ளார் ஆ.ராசா.
