திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றத் தலைவர் கர்ணன், திருச்சியிலுள்ள திமுக அலுவலகத்துக்குச் சென்று, திமுக மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான கே.என்.நேருவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர்மன்றத் தலைவர் கர்ணன், ‘எங்கள் தலைவர் ரஜினிகாந்த், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ரசிகர்கள் தங்களது விருப்பப்படி வாக்களிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனால், நாங்கள் திமுக-வுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம். இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான ரஜினிகாந்த் ரசிகள் திமுக-வுக்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் குசேலன், விஸ்வரூபம், தலைவா ஆகிய படங்கள் வெளியாவதில் பிரச்னை ஏற்பட்டது. விஜயகாந்த், ரஜினியைப் பற்றி பேசி வருகிறார். இனிஅவர், இதுபோன்ற பேச்சை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால், ரஜினி ரசிகர்கள் சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்’ என்று கூறினார்.
திமுக-வுக்கு, ரஜினி ரசிகர்கள் ஆதரவு
By Balaji
|
Published on 18 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








