தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்தசூழலில் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இன்று 46 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை உதவி ஆணையராக இருந்த சரோஜா, நெல்லை மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றபட்டார்.
ஆவடி காவல் ஆணையரக குற்ற ஆவண காப்பகத்தின் உதவி ஆணையர் முத்துராஜா, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பியாக மாற்றபட்டார்.
அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையராக இருந்த தமிழ்வாணன் பொன்னேரி காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறு 46 டிஎஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
