ADVERTISEMENT

2026 தேர்தல்.. ”கீழடி”க்கும் ஆர்.எஸ்.எஸ். “நாக்பூருக்கும்” இடையே போர்.. கனிமொழி

Published On:

| By Mathi

Kanimozhi DMK Campaign

“பழந்தமிழ் நாகரிகத்தின் பெருமையைப் பறைசாற்றும் கீழடிக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நாக்பூருக்கும் இடையேயான போர்தான் 2026 சட்டசபை தேர்தல்” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

கனிமொழி தமது எக்ஸ் பக்கத்தில், “பழந்தமிழ் நாகரிகத்தின் பெருமையைப் பறைசாற்றும் கீழடியிலிருந்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான எனது பரப்புரையைத் தொடங்குகிறேன்.

ADVERTISEMENT

கீழடிக்கும் நாக்பூருக்கும் இடையிலான போராக நடைபெறும் இந்தத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றியைப் பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும்; தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து காக்கும்” என தெரிவித்துள்ளார்.

கீழடி அகழாய்வு இடம் மற்றும் அருங்காட்சியகங்களைப் பார்வையிட்ட படங்களையும் கனிமொழி எம்.பி. பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share