2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று ஆகஸ்ட் 5 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்….
நீர்வளத் துறைக்கு 9,264 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறைக்கு 1,762 கோடி ரூபாய் ஒதுக்கீடு..
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு 39,609 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
பள்ளி கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.23,357 கோடி ஒதுக்கீடு
சிறப்புத் திட்ட செயலாக்க துறைக்கு 17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
எரிசக்தி துறைக்கு 15,828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு 14,830 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
போக்குவரத்து துறைக்கு 13,566 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ.11,532 கோடி ஒதுக்கீடு
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுமுகங்கள் துறைக்கு 21,524 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு ரூ.17,290 கோடி ஒதுக்கீடு.
வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 9,818 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு 8,852 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
உயர் கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு
கூட்டுறவுத் துறைக்கு ரூ.8,028 கோடி நிதி ஒதுக்கீடு
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு ரூ.4,414 கோடி நிதி ஒதுக்கீடு
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு ரூ.4,880 கோடி நிதி ஒதுக்கீடு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சமூக நீதித்துறைக்கு 3,937 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1485 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
நீதி நிர்வாகத் துறைக்கு ரூ.2,486 கோடி நிதி ஒதுக்கீடு.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.2,142 கோடி ஒதுக்கீடு.
கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு 1,678 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு 1,051 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
சுற்றுலா – கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கு ரூ.775 கோடி ஒதுக்கீடு
அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கீடு
வணிக வரிகள் துறைக்கு ரூ.651 கோடி ஒதுக்கீடு
முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கீடு
இயற்கை வளங்கள் துறைக்கு ரூ.438 கோடி ஒதுக்கீடு
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு ரூ.398 கோடி ஒதுக்கீடு
அனைவருக்கும் தரமான வீடு திட்டத்திற்கு 1,253 கோடி நிதி ஒதுக்கீடு.
முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு 2,117 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மனித – வனவிலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு காண 20 கோடி ரூபாய்.
தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்க திட்டத்துக்கு 40 கோடி ரூபாய்.
ரூ.6,884 கோடி மதிப்பில் 11,760 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கையாளும் பசுமை எரிசக்தி வழித்தடம் – கட்டம் 3 திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
காவிரி டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
புதிய வீட்டு வசதி திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும். வீட்டு அலகு தொகை ரூ.3.10 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
ரூ.1,543 முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்கள், 2000 கோடி ரூபாயில் 40 ஆயிரம் மின்மாற்றிகள் மாற்றம் செய்யப்படும்.
மாநிலம் முழுவதும் பத்து ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். இதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வெற்றித்திறன் பயிற்சி திட்டத்திற்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைப்பு செய்வதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
போதை இல்லா தமிழ்நாடு திட்டத்திற்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
புதிய பயணம்…. புதிய வேகம் திட்டத்திற்கு 277 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11ஆம் வகுப்பு படிக்கும் 5.32 லட்ச மாணவர்களுக்கு நடப்பு நிதியாண்டில் ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன மிதிவண்டி வழங்கப்படும்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைத்திட்டத்திற்கு 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு கிராமப்புற அதிகாரமளித்தல், மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நகர்புறத்தை ஒட்டிய கிராமங்களுக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. மலைப்பகுதி ஊராட்சிகளுக்கு ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. மொத்தம் இந்த திட்டத்திற்காக ஆண்டிற்கு 6 ,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
பொது விநியோகத் திட்டத்தில் பொட்டலமிட்ட கோதுமை மாவு வழங்க 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டத்தின் படி, மகளிர் சுய உதவி குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மேம்படுத்தப்படும். இத்திட்டத்துக்காக இந்த ஆண்டில் 38,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோரின் செயல் திறனை வெளிப்படுத்தும் சுய உதவி குழு நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் ‘வெற்றி 150’ திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்படும். இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
சென்னை மாநகரின் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்.
எரி சக்தியில் தன்னிறைவு பெறும் வகையில் வெள்ளிமலை நீரேற்று புனல் மின் திட்டம் விரைவுப்படுத்தப்படும். இதற்காக 5050 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
கோயம்புத்தூர்- அரியலூர் 765 கே வி மின் பகிர்மான திட்டம் 4000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
வீட்டுக்கு, சூரிய மின் பலகைக்கு 1லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
8 முதல் 18 வயதிற்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு பயிற்சிகளை வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 131 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்வி கட்டண உதவி தொகை வழங்க மொத்தம் 462.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
அயோத்திதாசர் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
ஹஜ் பயண மானியம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 35 ஆயிரம் ரூபாயாக உயர்வு.
கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு 1.05 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
கப்ரஸ்தான்கள் மற்றும் கல்லறைத் தோட்ட மேம்பாட்டிற்கு 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
அண்ணன் சீர் திட்டத்தில், பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்க 812 கோடி நிதி ஒதுக்கீடு,
வெற்றி தொழில் முனைவோர் திட்டத்திற்கு 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம் பெற ஏதுவாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆன்றோர் மேம்பாட்டு திட்டத்துக்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டத்திற்கு 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவ 6.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டெக்னாலஜி சென்டர் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம் நிறுவ 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
3,734 அரசு பள்ளிகளில் ரூ.2,132 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும்.
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டத்திற்கு 139 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
சென்னைக்கு 1000 புதிய ஏசி மின்சார பேருந்துகள் வாங்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு 9,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
நதிகளை மீட்பதற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
பொது ev சார்ஜிங் நிலையங்கள் அமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
சென்னையில் மீன் பகிர்மான திறனை வலுப்படுத்த 1390 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
