பாஜக-வில் அறிஞர் அண்ணாவின் பேத்தி

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

இதுவரை அரசியலில் ஆர்வம் காட்டாத அண்ணாவின் தத்துப் பிள்ளையான கவுதமனின் ஒரே மகளான சரிதா நேற்று, சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர், தனது கணவருடன் பாஜக-வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எனது தாத்தா பேரறிஞர் அண்ணா குடும்ப அரசியலை ஊக்குவித்து இருந்தால், இன்று எங்கள் குடும்பம் இப்படி இருந்திருக்க மாட்டோம். தமிழுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும்தான் அண்ணா கட்சி தொடங்கினார். ஆனால், இன்று அந்தக் கட்சியில் குடும்ப அரசியலும், ஊழலும்தான் உள்ளது. இதனால் மக்கள் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் நான் பாஜக-வில் என்னை இணைத்துக் கொண்டேன். வளர்ச்சியான தமிழகம், ஊழல் இல்லாத தமிழகத்தை அண்ணா விரும்பினார். அதை பாஜக-வால் மட்டுமே கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என்றார். கட்சியில் இணைந்ததையடுத்து, சரிதா அல்லது அவர் கணவருக்கு காஞ்சிபுரத்தில் ஒரு சீட் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி மயூரி அண்மையில் திமுக-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel