தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் சேலம் வடக்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பி.நடேசன் கையில் கட்டுடன், முகத்தில் காயத்தழும்புகளுடன் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். திமுக-வில் 25 ஆண்டுகளாக இருந்த நடேசன் சேலம் மாநகராட்சியின் மண்டலக்குழுத் தலைவராகவும் பகுதிச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். இவர் மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக செயல்பட்டதால் திமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கியது. மீண்டும் திமுக-வில் இணைந்த நடேசன், ஒரு மாதத்துக்குமுன் மீண்டும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். வேட்பு மனுத்தாக்கலுக்குப் பின்னர் பேசிய நடேசன், “என்னைக் கொல்ல முயற்சி நடந்தது. என்னைத் தாக்கியவர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நான் திமுக-காரன்தான். தேர்தலில் வெற்றி பெற்றதும் மீண்டும் திமுக-வில் இணைவேன்” என்று கூறினார்.
திமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர் சுயேட்சையாகப் போட்டி
By Balaji
|
Published on 23 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








