மல்லையாவின் பாஸ்போர்ட் காலம்கடந்து முடக்கப்பட்டிருப்பது குறித்து டீவிட்டராட்டிகளின் அங்கலாய்ப்புகளும் மற்றும் முகநூல் பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்களின் ஸ்டேடஸ்கள் இன்றைய அப்டேட் குமாரில்…
// @bommaiya
மல்லையா பாஸ்போர்ட் முடக்கம்… # அப்படியே அவரோட ரேஷன் கார்டையும் முடக்கிடுங்ண்னா… அரிசி சக்கர பாமாயில் கிடைக்காம சாவட்டும்..! //
//@haidaaraja
செய்தி: விஜய் மல்லையாவின் Passport முடக்கம். குண்டுவெடித்த பிறகு அந்த இடத்துக்கு பலத்த பாதுகாப்பு குடுப்பாய்ங்களே … அந்த மாதிரி ! //
// @mugathirai
மல்லையா பாஸ்போர்ட் முடக்கம் – மத்திய அரசு. #ஆமா திரும்பி வராதவருக்கு எதுக்கு பாஸ்போர்ட்? //
// @mugathirai விஜய் மல்லையா பாஸ்போர்ட் முடக்கம்..!! # மத்திய அரசு நடவடிக்கை!
## மனம் திருந்திகூட மல்லையா இந்தியா பக்கம் வந்து சிக்கிடகூடாது. அதானே உங்க நோக்கம்..!! //
//@mekalapugazh
எப்பப்பாரு திண்ணையே கதி – பாட்டி.
எப்பப்பாரு அந்தத் தெருமுனை டீக்கடையே கதி -அம்மா
எப்பப்பாரு அந்த ஃபோனே கதி -மனைவி //
//@udanpirappe
கச்சத்தீவை மீட்கணுங்கிற ஐடியா திடீர்னு
எப்படிங்க தோணுச்சு?
ஜெ: திமுக தேர்தல் அறிக்கையை
படிச்சதுக்கு அப்புறம் தோணுச்சுங்க //
// @drramadoss
கச்சத்தீவை மீட்டே தீருவேன்: ஜெயலலிதா நிலாவை காட்டி சோறு ஊட்டினால் தாய்… கச்சத் தீவை காட்டி ஓட்டு கேட்டால் அது அம்மா! //
//@kaviintamizh
திமுக தேர்தல் அறிக்கை வந்தப்ப பாமக, பாமகனு கத்துனாங்க.. இப்ப பாமக தேர்தல் அறிக்கை வந்திருக்கு ஒருத்தனும் கண்டுக்கல.. # டிசைன்ல இருக்கு.. //
Saravanan Chandran
நூறு நாள் வேலைத்திட்டத்தில் 123 ரூபாய்தான் தருகிறார்கள். 27 ரூபாயை லஞ்சமாகப் பிடித்துக் கொள்கிறார்கள் என்றார் தொழிலாளி. அவர் வருத்தத்தில் பேசுகிறார் என நினைத்து உச் கொட்டியபோது, ‘இதுல என்ன சார் இருக்கு. உழைச்சோம்னா சண்டை போட்டுக் கேட்கலாம். பாதி நேரம் சும்மாதானே இருந்துட்டு வர்றோம்’ என்றார். நல்ல அரசு, நல்ல குடிமக்கள் என்று நான் வாய் விட்டுச் சொன்னபோது, நான் குடிக்கிறதில்லீங்க என்றார் அப்பாவியாய்.//
Murugesan Chittoor
எத்தனை முறை ஜெயலலிதா மக்களை சந்தித்து பேசினார்? கருணாநிதி கேள்வி
– இவரு வேற தேஞ்சு போன ரிக்கார்டு மாதிரி ஒரே கேள்வி. உங்களுக்குதான் வேலையில்லை; வெட்டியில்ல. அவியளுக்கு எத்தனை வேலை இருக்கு? ‘ஆயிரம் கோடி’யில தியேட்டர் வாங்கணும்னா எவ்ள வேலை இருந்திருக்கும். //
// Jeeva Giridharan
மனித நேய மக்கள் கட்சி ஒரு தொகுதியை திமுக-விடம் திருப்பித் தந்ததையடுத்து ஆளாளுக்கு பற்பல யூகங்களுடன் முகநூலில் செய்தியை பதிகிறார்கள். இதில் சில திமுக, மமக எதிர்ப்பாளர்களின் வக்கிரமான பதிவுகள் அவர்களின் நயவஞ்சக நரித்தனத்தையே முன்னிறுத்துகிறது. சமுதாயம் ஒரு தொகுதியை இழந்திருக்கிறதே என்று வருத்தப்படாமல் திமுக-வையோ, மமக-வையோ குற்றம்சாட்டுவது காழ்ப்புணர்ச்சியைத்தான் காட்டுகிறதே ஒழிய சமுதாய அக்கரையை காட்டவில்லை. போராடிப் பெற்ற ஒரு தொகுதியை திருப்பித்தருவது எவ்வளவு வலி மிகுந்தது என்பது அந்த வலியை சுமப்பவர்களுக்குத்தான் தெரியும்.
சமுதாயம் தன்னை இன்னும், இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசர அவசியம் மட்டுமே இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்…//
Siva Kumar
#கலைஞர் டிவி இன்னும் உங்க வீட்ல ஓடுச்சுனா அவருக்கே போடுங்க ஓட்டு,
#கிரைண்டரும் மிக்சியும் ஓடுச்சுனா அம்மாவுக்கு போடுங்க,
#எதுவுமே வாங்கலை… வாங்க புடிக்காதவங்க மநகூ வாக்களியுங்க
#லவ் மேரேஜே பண்ணமாட்டேன்னு (செட் ஆகலைனா கம்பெனி பொறுப்பாகாது) சொல்றவங்க பாமக குத்துங்க,
#15லட்சம் செக் வாங்கினவங்க.. வாங்க போறவங்க பிஜேபி-க்கு போடுங்க
#தமிழ் படிச்சு, திருக்குறள் தெரிஞ்சு இன்னும் பழனிக்கு மொட்டை போடுறதா இருந்தா நாம் தமிழருக்கு போட்டுறங்க. //









