ஜி.கே.வாசன் : அதிமுக கூட்டணி – ஜோதிடர் ஒதுக்கிய சின்னம்!

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் தற்போது அதிமுக கூட்டணியில்

25 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.இது பற்றி அதிமுக தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.திங்கள்கிழமைக்குள் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார் வாசன்.தமிழ் மாநில காங்கிரஸுக்கு சைக்கிள் சின்னத்தை எதிர்பார்த்தனர்.ஆனால் அது சமாஜ்வாதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால்,வேறு என்ன சின்னத்தைக் கேட்கலாம் என்று யோசித்தார்கள்.புதிய சின்னமாக எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஜோதிடரை அணுகி கேட்டிருக்கிறார் ஞானதேசிகன்.அவர் குலைதள்ளி தென்னைமரம் தான் நல்லது என்று கூறியிருக்கிறார்.எனவே அந்த சின்னத்தையே தேர்தல் ஆணையத்திடம் கேட்பார்கள் என்று நம்பலாம்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel