ஐபிஎல் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கவுதம் கம்பீரும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக செயல்படுகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ரைஸிங் புனே சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்தப்போட்டியில் தனது முதலாவது வெற்றியைப் பெற மும்பை அணியும், அடுத்த வெற்றிக்காக கொல்கத்தா அணியும் முயற்சிக்கும் என்பதால் இந்தப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுழற்பந்துக்குச் சாதகமான ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா அணி இதுவரை ஆடியுள்ள 13 போட்டிகளில் 12-ல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் – இன்று
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
