ADVERTISEMENT

தோனி மகளுக்கு அழைப்பு!

Published On:

| By Balaji

மலையாள சினிமா பாடலைப் பாடிய தோனியின் மகளை சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்துள்ளது கேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில் நிர்வாகம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஐந்து வயது மகள் ஸிவா. சமீபத்தில் இவர் தனது மழலைக் குரலில் பாடிய மலையாள சினிமா பாடல் வீடியோ நாடு முழுவதும் வைரலாக பரவியது.

ADVERTISEMENT

மலையாளத்தில் மோகன்லால் நடித்த அத்வைதம் படத்தில் இடம்பெற்ற [அம்பலப்புழே](https://www.instagram.com/p/BaoXO1In81a/?taken-by=zivasinghdhoni006) என்று தொடங்கும் பாடலைப் பாடினார் ஸிவா. அவர் பாடிய அந்தப் பாடல் ஸிவா சிங் தோனி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, பலரும் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இப்பாடலை கேட்ட திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் நிர்வாகிகள் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் ‘பந்த்ரண்டு கலாபாம்’ என்ற விழாவில் கலந்து கொள்ள தோனி குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் தோனியின் மகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் ஆலோசனைக்குழு தலைவர் கொட்டாரம் உன்னிகிருஷ்ணன், விரைவில், தோனியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவருடைய மகள் ஸிவா, கோவில் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share