தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு, தடை காரணமாக நடைபெறாமல் முடிந்து போனது.
ஜல்லிக்கட்டுக்காக காளைகளை வளர்த்து வந்தவர்கள் வேறு வழியில்லாமல் தங்களது காளைகளை இறைச்சிக்காக அடிமாடுகளாக கேரளாவுக்கு அனுப்பும் நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து, ஊடகங்களில் அவ்வப்போது செய்திகளும் வெளியாகின. இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்றும் நடவடிக்கையாக, ஜல்லிக்கட்டுக் காளைகளை தான் விலைக்கு வாங்கிக் கொள்ளத் தயார் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நேற்று அறிவித்துள்ளார்.
