திருநெல்வேலி தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 திருநெல்வேலி வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

திருநெல்வேலி தொகுதியை பொருத்தவரை, திமுக வேட்பாளராக சுப்ரமணியன் களமிறங்குகிறார். 

இந்த தொகுதியில் போட்டியிட திமுகவிடமிருந்து சீட் எதிர்பார்த்த ஆர் எஸ் முருகனுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் கடைசி நேரத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அக்கட்சி சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். மிகுந்த பணபலம் மிக்கவர். 

இன்னொரு பக்கம் டாக்டர். கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தேவேந்திரகுல வேளாளர் மக்களிடம் இவருக்கு ரொம்பவே வரவேற்பு இருக்கிறது. 

இந்த தொகுதியில் பிள்ளைமார் சமூக மக்கள் எப்போதுமே அதிமுக பாஜக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் தச்சை கணேசராஜா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா களம் காண்கிறார். 

திமுக வேட்பாளர் சுப்ரமணியன் நல்ல கேண்டிடேட் என்றாலும் களச்சுழல் வேறு மாதிரியாக உள்ளது. 

மாநகராட்சி நகர்ப்புற தேர்தல்களில் பிள்ளைமார் ஓட்டுகள் அதிகம் அதிமுக பாஜகவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த முறை திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஓட்டுக்கள் கொஞ்சம் மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. 

2021 தேர்தலில் இந்த தொகுதியில் நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 

நமது சர்வே முடிவுபடி, 

திமுக-39%
அதிமுக-35%
தவெக-18%
நாதக-7%வாக்குகள் பெறும்

திமுக வேட்பாளர் சுப்ரமணியன் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? திருநெல்வேலி | Tirunelveli | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share