கன்னியாகுமரி தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

 கன்னியாகுமரி வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

நமது சர்வே முடிவுபடி, 

கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை 2021-ல் வெற்றி பெற்ற அதிமுகவின் தளவாய்சுந்தரம் இந்த முறை களம் காண்கிறார். கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆஸ்டினை 16,213 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திமுக சார்பில் மேயர் மகேஷ் வேட்பாளராக நிற்கிறார். 2011, 2016 தேர்தல்களில் இங்கே பாஜக கணிசமான வாக்குகளை வாங்கியிருந்தது.

அதிமுகவுக்கு இந்த வாக்குகள் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். கள நிலவரமும் அதைத்தான் சொல்கிறது. அதிமுக சற்று முன்னிலை வகிக்கிறது.. இருந்தாலும் திமுக இன்னும் கடுமையாக வேலை செய்தால் களம் மாற வாய்ப்பிருக்கிறது.

தவெக சார்பில் மாதவன், நாதக சார்பில் மரியா ஜெனிபர் களம் காண்கின்றனர்.

நமது சர்வே முடிவுபடி,

திமுக கூட்டணி- 39%
அதிமுக கூட்டணி-40%
தவெக-15%
நாதக-5%  வாக்குகள் பெறும்

அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் முன்னிலை வகிக்கிறார்.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? கன்னியாகுமரி | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share