ADVERTISEMENT

இனி மூன்று முறை ‘வாட்டர் பெல்’… பள்ளிகளில் புதிய சிஸ்டம்!

Published On:

| By Selvam

water bell system introduced

மாணவர்களின் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு அவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என்பதால், மாணவர்கள் சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். water bell system introduced

இந்தநிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டமானது ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் எழுதியுள்ள கடிதத்தில்,

“மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்த போதிய அளவு தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து தண்ணீர் குடிக்க அறிவுறுத்த வேண்டும். இதற்காக வகுப்பறையை விட்டு மாணவர்கள் வெளியே செல்லாமல் இருக்கும் இடத்திலேயே தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

வகுப்பு சூழல் பாதிக்கப்படாத வகையில், மூன்று நிமிடங்கள் மாணவர்கள் தண்ணீர் குடிக்க அனுமதி வழங்கலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை குடிநீர் பாட்டில்கள் எடுத்து வர அறிவுறுத்த வேண்டும். தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். water bell system introduced

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share