கோவிலில் யானை சிலைக்கு அடியில் ஒருவர் சிக்கியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
எந்தவித அதீத பக்தியும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பதுபோல, கோவிலில் யானை சிலைக்கு கீழே பக்தர் ஒருவர் சிக்கியிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
நிதின் என்ற ட்விட்டர் பயனர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கோவிலில் உள்ள யானை சிலையை ஒருவர் தரிசித்தபோது சிலையின் அடியில் தற்செயலாக மாட்டிக்கொள்கிறார்.
அவர் யானையின் சிலைக்கு அடியிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகிறார். குறுகிய இடைவெளிக்குள் அவர் சிக்கிக்கொண்டதால் எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் வெளியே வரமுடியவில்லை.
அப்போது கோவிலில் உள்ள மற்ற பக்தர்கள் அவரை வெளியேற்றுவதற்கு முயற்சித்தனர். சிலைக்கு அடியில் இருந்து அவரை வெளியேற்றுவதற்கு சில நுட்பங்களை பயன்படுத்தும்படி ஆலோசனை கூறினர். கோவிலின் பூசாரி அவருக்கு உதவினார். இருப்பினும் அவரால் சிலைக்கு அடியிலிருந்து வெளியேற முடியவில்லை.
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் எந்த பகுதியில் நடைபெற்றது என்பதும் கோவிலின் பெயரும் தற்போது வரை தெரியவில்லை.
இந்த வீடியோக்காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
செல்வம்
