ரயிலோ, பேருந்தோ தாமதமாக வந்தால் சலிப்படையும் பயணிகளுக்கு மத்தியில் இளைஞர்கள் 9 மணி நேரம் தாமதமாக வந்த ரயிலை விசிலடித்தும், கைகளையும் தட்டியும் கொண்டாட்டத்துடன் வரவேற்று இருக்கின்றனர்.
அவசரமாக வெளியூர் செல்வதாக இருந்தாலும், வேலைக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதாக இருந்தாலும் ரயிலோ, பேருந்தோ சிறிது நேரம் தாமதமாக வந்தாலே மக்கள் கடுப்பாகிவிடுவார்கள்.
ஆனால் 9 மணி நேரம் ரயில் தாமதமாக வந்தபோது ஏராளமான இளைஞர்கள் அதனை கொண்டாட்டத்துடன் வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
ட்விட்டர் பயனாளரான ஹர்திக் போந்து என்பவர், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் 9 மணி நேரம் தாமதமாக வந்ததை மக்கள் கொண்டாடுவதை வீடியோவாக எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ரயிலில் பயணம் செய்ய பல மணி நேரம் ஆகும், ஆனால் 9 மணி நேரம் தாமதம் என முன்கூட்டியே எஸ்.எம்.எஸ் கிடைத்ததால் நாங்கள் வீட்டிலும், ஹோட்டல் அறையிலும் சாவகாசமாக தங்கி பின்னர் ரயில் நிலையம் வந்தடைந்தோம்.
9 மணி நேரம் தாமதமாக ரயிலை இயக்கிய ரயில் ஓட்டுநரையும், ரயிலையும் வரவேற்கும் விதமாக விசில் அடித்தும், கூச்சலிட்டும் வரவேற்றோம் என பயணிகள் தெரிவித்து உள்ளனர்.
தாமதத்தை கூட வரவேற்கும் மனநிலை இந்தியர்களுக்கு உண்டு என சிலர் பதிவிட்டுள்ளனர். அதேநேரத்தில், இது எந்த ரயில் நிலையம் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
கலை.ரா
மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மரப்பாதை: போலீஸ் பாதுகாப்பு!