வீட்டு விலங்குகளில் நாய் போல பூனையும் ஒன்று. பூனைக்கு அதிக பாச குணம் உண்டு, ஆனால், அது வன்மை நிறைந்ததும் கூட.
தனக்கு பிடித்தவர்கள் கூட மட்டும் தான் பழகும். அவர்கள் எங்குச் சென்றாலும் அவர்களது காலை உரசிக் கொண்டே போகும் வரும். இதில் சில பூனைகள் அவர்களுக்குப் பிடித்தவர்கள் சாப்பாடு வைத்தால் மட்டுமே உண்ணும்.
சிலருக்குப் பூனை என்றால் அலர்ஜி என சொல்வார்கள். சிலருக்கு அதனுடைய முடி உதிர்வு ஒத்துக்கொள்ளாது.
ஆனால் உண்மையில் பூனை வளர்ப்பது ஒரு ஆறுதலான செயலும் கூட. அதன் செயல்பாடுகள் சில சமயங்களில் நமது மன அழுத்தத்தை குறைக்கும்.
அப்படியொரு பூனையின் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
வெறும் 8 நொடி ஓடும் அந்த வீடியோ பார்ப்பவர்களின் மனதைக் கவர்கிறது.
ப்யூடென்கெபிடென் என்ற ட்விட்டர் கணக்கால் வெளியிடப்பட்ட வீடியோவில், ஒருவர் சோகமாகக் கண்ணீருடன் அமர்ந்திருக்கிறார்.
அப்போது அவரது வளர்ப்பு பூனை தனது உரிமையாளர் சோகமாக இருப்பதை உணர்ந்து, ஆறுதல் சொல்ல மார்பில் ஏறுகிறது.
பின்னர் தனது மெல்லிய காலை உரிமையாளரின் கன்னத்தில் வைத்துத் திருப்பி பார்க்கிறது. கண்ணீர் வருவதைப் பார்த்த அந்த பூனை உரிமையாளரின் முகத்தோடு தன் முகத்தையும் சேர்த்து வைத்துக்கொள்கிறது.
தொடர்ந்து இருவரும் கண்ணை மூடி அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.
இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல்.
நவம்பர் 16 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ 2.23 லட்சம் பார்வைகளையும், 13,900 விருப்பங்களையும், 1,700 ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.
இந்த காணொளிக்கு கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள், இதுபோன்ற ஆறுதலைப் பெறுவதை விட இனிமையானது வேறு எதுவும் இல்லை. எல்லா மனிதர்களும் இதுபோன்று இரக்கம் கொண்டவர்களாக இருந்துவிட்டால், உலகம் மிகச் சிறந்த இடமாக இருக்கும் என்று லவ் இமோஜிக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிரியா
புத்திசாலி நாய்: இணையத்தில் வைரலான வீடியோ!
பரிமலையில் பெண்கள் : பின்வாங்கிய கேரள அரசு!